சாய்ந்தமருது: சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்தின் முதலாவது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் உள்ளிட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பொற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வில்ல விளையாட்டுப் போட்டிகள் ஹிக்மா இல்லம் (நீலம்), ஸஹ்றா இல்லம் (மஞ்சள்), இல்மா இல்லம் (பச்சை) ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இதில் ஹிக்மா இல்லம் 130 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், இல்மா இல்லம் 127 புள்ளிகளைப் பெற்று இரணடாம் இடத்தையும், ஸஹ்றா இல்லம் 100 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஹிக்மா இல்லத்திற்கான வெற்றிக் கிண்ணத்தை மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் வழங்கி வைத்தார்.
Published by

Leave a comment