மாவடிவேம்பில் வேன் மோதியதில் பாடசாலை மாணவி மரணம்: வேன் தீக்கிரை

unnamedஓட்டமவடி அஹமட் இர்ஸாட்

ஏறாவூர்: மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமான மாவடிவேம்பு எனுமிடத்தில் அக்கறைப்பற்றிலிருந்து குருணாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் துவிச்சக்கர வண்டியுடன் பாதையை கடக்க முட்பட்ட 14 வயது மதிக்கதக்க பாடசலை மாணவியுடன் மோதியதால் மாணவி பரிதாபகரமாக ஸ்தலத்திலேயே மரணமானார்.

குருணாகலில் இருந்து சாரதியுடன் மேலும் ஐந்து பேர்கள் அக்கறைப்பற்றிலுள்ள தமது உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு குருணாகலுக்கு திரும்பும் வழியிலேயே இப்பரிதாபகர சம்பவம் (08.03.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து சம்பவம் இடம் பெற்ற இடத்தை அண்டிய பிரதேச வாசிகள் குறிப்பிட்ட வேனை செல்லுத்திய சாரதியை தாக்கியுள்ளதுடன் வேனையும் முற்றாக தீக்கிரையாக்கி உள்ளனர்.

மேலும் சம்பவம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அதே வழியாக வந்த ஓட்டமாவடியை சேர்ந்த மற்றுமொரு வேனில் பிரயாணம் செய்தவர்கள் குறித்த வேனில் குருணாகல் நோக்கி பயணமானவர்களை பாதுகப்பு படையினரின் உதவியுடன் பாதுகப்பாக ஓட்டமாவடிக்கு அழைத்து வந்து மீண்டும் ஏறாவூர் பொலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

சாரதியை உடனடியாக கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள ஏறாவூர் பொலிஸார் படசாலையின் மாணவியின் மரணம் சம்பந்தமாகவும், வேன் தீக்கரையாக்கப்பட்டது சம்பந்தமாகவும் மேலதீக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed1

unnamed

Published by

Leave a comment