சூடுவேந்தபுளவு கிராம மக்களின் தேவைகள் தொடர்புகள் ஆராயும் வகையில் றிசாத் பதியுதீன் விஜயம்

rishadஇர்சாத் ரஹ்மத்துல்லாஹ்

வவுனியா: வவுனியா மாவட்டத்தின் சூடுவேந்தபுளவு கிராம மக்களின் தேவைகள் தொடர்புகள் ஆராயும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டார்.

வவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்ட இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பிலும், பிரதேசத்தின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராயும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் விஜயம் அமைந்திருந்தது.

வவுனியா நகரை அண்டிய கிராமங்களில் சூடுவேந்தபுளவு பழமை வாய்ந்த கிராமமாகும். இந்த கிராம மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அசாதாரண சூழ் நிலையில் வாழ்ந்து வந்தனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் முயற்சியால் வவுனியா மாவட்டத்துக்கான தேசிய மீலாத் விழா சூடுவேந்தபுளவு கிராமத்தில் இடம் பெற்றது. அதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்துக் கொண்ட முயற்சியினால் இப்பிரதேசத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இருந்த போதும் இன்னும் இம்மக்களின் வீடில்லாப் பிரச்சினை காணப்படுவதால் அதனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சரின் கவனத்தை ஈர்க்குமாறு இப்பிரதேச மக்கள் கோறிக்கைவிடுத்தனர். இதனையடுத்து இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் இக்கிராமத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

அமைச்சருடன் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத், வவுனியா மாவட்ட அமைச்சரின் இணைப்பளார் எம். ஆரிப், நகர இணைப்பாளரும், முன்னாள் நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி உள்ளிட்ட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

Published by

Leave a comment