காலிறுதிக்கு முன்னேற மேற்கிந்தியா, அயர்லாந்து, பாக். போட்டி: கள நிலவரம்

west indiesமெல்போன்: உலகக் கிண்ணத்தில் பி பிரிவில் காலிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தென்னாபிரிக்காவுடனான கடந்த சனிக்கிழமை போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் அந்த அணி நிகர ஓட்ட விகிதம் சிக்கலின்றி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

மறுபுறம் நேற்று முன்தினம் போட்டியில் அயர்லாந்திடம் தோல் வியை சந்தித்ததன் மூலம் பி பிரிவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அடுத்து சிம்பாப்வேயும் முதல் சுற்றுடன் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறுகிறது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுடனான லீக் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் அந்த அணி கடைசி எட்டு அணிகளுக்குள் இடம்பிடித்தது.

west indies

இந்திய அணி பி பிரிவில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள அந்த அணிக்கு இருக்கும் கடைசி இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். இந்தியாவுக்கு வலுவில்லாத அயர்லாந்து மற்றும் சிம்பாப்வேயுடனான போட்டிகள் மாத்திரமே எஞ்சியுள்ளது.

தென்னாபிரிக்க அணி பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைந்த போதும் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறுவதை தடுக்க அது பெரியசவாலாக இருக்காது. தென்னா பிரிக்காவுக்கு தொடர்ந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியே எஞ்சியுள்ளது.

தென்னாபிரிக்காவின் நிகர ஓட்ட வேகம் உச்சத்தில் இருப்பதால் அயர்லாந்து எஞ்சியிருக்கும் தனது இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியை சந்தித்தாலும் தென்னாபிரிக்கா பி பிரி வில் இருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும்.

ireland

இதனால் பி பிரிவில் அரையிறுதிக்கு தெரிவாகும் எஞ்சிய இரண்டு இடங்களுக்கும் பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.

பாகிஸ்தானுக்கு அயர்லாந்துடனான போட்டி மாத்திரம் எஞ்சியுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அது சந்தேகம் இன்றி அரையிறுதிக்கு முன்னேறி விடும். இந்த போட்டியில் தோல்வியடைந்தால், நிகர ஓட்ட விகித அடிப்படையில் மேற்கிந்திய மற்றும் பாக். அணிகளில் ஒன்று காலிறுதி வாய்ப்பை பெறும். அதாவது மேற்கிந்திய அணி தனது கடைசி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தும் பட்சத்தில் நிகர ஓட்ட விகிதம் தீர்க்கமாக அமையும்.

அயர்லாந்துக்கு மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்க 6 புள்ளிகளுடன் காணப்படுகிறது. அந்த அணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான சவாலான போட்டிகள் எஞ்சியுள்ளன. இதில் ஒன்றிலாவது வென்றால் அயர்லாந்து காலிறுதிக்கு முன்னேறிவிடும்.

சிம்பாப்வேயுடனான போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தீர்க்கமான 2 புள்ளிகளை அதிகரித்துக் கொண்டபோதும் அந்த அணி குறைந்த இடை வெளியில் வென்றதால் அதன் நிகர ஓட்ட விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதாவது அயர்லாந்து தற்போது பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளை விடவும் மோசமான நிகர ஓட்ட விகிதத்தை (-0.820) கொண்டுள்ளது.

india

எனவே அயர்லாந்து தனது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் அது வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழலில் அயர்லாந்து காலிறுதிக்கு முன்னேற ஐக்கிய அரபு இராச்சியம், மேற்கிந்திய தீவுகளை வீழ்த்த வேண்டிய கடினமான எதிர்பார்ப்பை நம்பியிருக்க வேண்டும்.

பி பிரிவில் காலிறுதிக்கு முன்னேறுவதற்கு ஏனைய போட்டிகளின் முடிவில் தங்கியிருக்க வேண்டிய ஒரே அணி மேற்கிந்திய தீவுகளா கும். மேற்கிந்திய அணி தனது காலிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முதலில் அந்த அணி ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்துவது மட்மன்றி அதிக இடைவெளியில் வெல்வது சிறந்ததாகும்.

இதில் நாளை நடை பெறும் இந்தியாவுடனான போட்டியில் அயர்லாந்து வென்றால் பி பிரிவில் காலிறுதிக்கான ஒரு இடம்தான் காலியாக இருக்கும். இந்த நிலையில் பாகிஸ்தானும் அயர்லாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய அணி களில் ஒன்று காலிறுதிக்கு முன்னேறுவது நிகர ஓட்ட விகிதத்தில் தங்கியுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அயர்லாந்துடனான போட்டியில் வென்றால் மேற்கிந்திய அணி வெளியேறிவிடும். அயர்லாந்து எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் தோற்றால் மேற்கிந்திய அணியின் நிகர ஓட்ட விகிதம் உச்சத்தில் இருப்பதால் அது காலிறுதிக்கு முன்னேற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

South Africa v Pakistan - 2015 ICC Cricket World Cup

இந்தியாவுடனான போட்டி மழையால் ரத்தானாலோ அல்லது ‘டை’ ஆனாலோ அயார்லாந்து காலிறுதிக்கு முன்னேறிவிடும். இந்த நிலையில் பாக். அணி காலிறுதிக்கு முன்னேற அயர்லாந்தை வீழ்த்த வேண்டும் அல்லது மேற்கிந்திய தீவுகளை விடவும் சிறப் பான நிகர ஓட்ட விகிதத்தை பெற வேண்டும்.

பி பிரிவின் கடைசி போட்டிகளான அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அல்லது மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய ஆட்டங்களில் ஏதாவது ஒன்று மழையால் கைவிடப்பட்டாலோ அல்லது சமநிலையில் முடிந்தாலோ மேற்கிந்திய அணி வெளியேறுவது உறுதியாகிவிடும்.

Published by

Leave a comment