‘எனது முறைப்பாட்டை உடன் விசாரித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கவும்’: அமைச்சர் றிஷாட்

rishadகொழும்பு: எனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை உடனடியாக விசாரணை செய்து முடிவை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (06) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு இணங்கவே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசாரணைக்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவரினாலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Published by

Leave a comment