ஏறாவூர்: சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்கொண்ட விஜயத்தின் போது ஏறாவூர் தள வைத்தியசாலைக்கும் இன்றைய தினம் வருகைதந்தார். இந்த விஜயத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, சிப்லி பாறுக், மற்றும் துரைரெட்ணம், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வின்போது வைத்தியாலையின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அமைச்சு அதிகாரிகள் ஊடாக உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவெடிக்கைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இதன்போது தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச். தாரிக் அவர்களினால் வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் வைத்தியாலையின் தேவைகள் தொடர் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக பெயரளவில் மாத்திரம் தளவைத்தியசாலையாக இவ் வைத்தியசாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது வளப்பற்றாக்குறை காரணமா பிரதேச மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அத்துடன் விஷேட வைத்திய நிபுணர்களின் வருகையின்மையினாலும் பல்வேறு அசௌகரிகங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது எனவே விஷேட வைத்திய நிபுணர்களுக்கான விடுதி வசதியினையும் ஏற்படுத்தி அவர்களின் சேவையினையும் ஏறாவூர் மக்கள் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ள நடவெடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தொடர்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா,
தனது அழைப்பில் முன்னால் சுகாதார அமைச்சராக இருந்த பௌசி அவர்கள் ஏறாவூர் வைத்தியாலைக்கு வருகை தந்தபோது ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள மீராகேணி மத்திய மருந்தகத்திற்கு அழைத்துச்செல்ல முட்பட்ட வேலை மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல்வாதி ஒருவர் பயங்கரவாத அச்சுருத்தல் இருப்பதால் அப்பிரதேசத்திற்கு செல்லவேண்டாம் என்று கூறி அவ்விஜயத்தை தடுத்து நிறுத்தினார் எனவே கௌரவ அமைச்சர் அவர்களே இன்றைய சமாதான சூழ்நிலையில் மீராகேணி மத்திய மருந்தகத்திற்கும் தாங்கள் விஜயமென்றை மேற்கொண்டு அவ் வைத்தியசாலையின் குறைகள் தொடர்பில் கேட்டறிந்து தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்ததிற்கினங்க மீராகேணி வைத்தியசாலைக்கும் அமைச்சர்கள் குழுவினரால் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment