“முதலமைச்சர் பதவியை வியாபாரமாக்கினால் முதுகில் குத்துவோம்”: கிழக்குமாகானசபை பிரதி தவிசாளர்

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: மீராகேனி பிரதேச வறுமைக்கோட்டின்கீழ் வாழும் இருபது யுவதிகளுக்கு ,அவர்களது வாழ்வாதாரத்தை நிவர்த்திக்கும் நோக்கில் இன்று மாலை தையல் பயிற்ச்சி நிலையமொன்று மீராகேர்னி ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னுள்ள கடைத்தொகுதியில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட இந் நிகழ்வுக்கு பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு, ஏனைய அதிதிகளாக முன்னாள் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், தேசிய புடவைக் கைத்தொழில் அதிகாரசபையின் தையல் பயிற்சி நிலைய மேற்பார்வையாளருமான அல்ஹாஜ் ULM.ஜெய்னுதீன், பிரதேச மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்,எஸ்,எம்,நஸீர் ஆகியோரோடு பொதுமக்கள்,பயனாளிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

eravur

இந் நிகழ்வில் உரையாற்றிய பிரதி தவிசாளர் சுபைர் ,
வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான கௌரவ அல்ஹாஜ் றிசாத் பதுர்தீன் அவர்கள் ,எமதூருக்கு இவ்வாறான மூன்று தையல் பயிற்ச்சி நிலையங்களை நான்,கேட்டுக்கொண்டதற்கிணங்க தந்தற்காக முதலில் அவருக்கு எனது ஊர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் பேசிய இவர்,

eravur (2)

கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் விவகாரம் சூடுபிடித்து ஓரளவு தணிந்துள்ள நிலையில் ,அம்முதலமைச்சுப் பதவியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு வகையான பிரயத்தனங்கள் ,பணப்பரிமாற்றங்கள் இடம்பெருவதாக கதைகள் கசிகின்றன.
அவ்வாறு பணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பதவியை பாதுகாப்பது சிரமம்.முதலமைச்சர் பதவியை வியாபாரப் பொருளாக்கினால் முதுகில் குத்துவோம்.மாறாக மாகாண மக்களுக்கு நல்லது செய்தால் முழுமையான பங்களிப்பு செய்வோம் என்றும் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக ஏறாவூரில் குறுகிய நாட்களுக்குள் ஒன்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடாத்திய நான் ,இன்று அதே ஜனாதிபதியின் ஆட்சியில் எனது பிரதி தவிசாளர் பதவியைக்கூட தக்கவைக்க முடியாமல் நிற்கிறேன்.

eravur (3)

ஆனால் மைத்ரியின் வெற்றிக்காக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களிடம் முந்நூறு மில்லியன்களை பெற்ற முஸ்லிம் கட்சி ஏறவூரில் ஒரு கூட்டமேனும் போடாமல் இப்பணத்தை என்ன செய்தார்கள்? இவ்வாறான கைநீட்டும் பழக்கங்களால் எமது சமூகத்தை பெரும்பான்மை சமூகம் கேவலமாக பார்க்கும் நிலை தோன்றியுள்ளது என்றும் கூறினார்.

Published by

Leave a comment