மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஊடக அமைப்பு உதயம்

EMSபுவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த சமயங்களைப் பின்பற்றும் தமிழ், சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் வகையில் ‘கிழக்கு ஊடக சங்கம்’ எனும் பெயரில் புதிய ஊடக அமைப்பொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘எழுத்துக்களின் இணைவால் இனங்களை இணைத்து ஐக்கிய இலங்கையைக் காண்போம்’ எனும் கருப்பொருளில், ‘வேற்றுமைகளும், சுயநலன்களுமற்ற ஊடகப்பணி செய்து நாம் உயர்வதுடன் நம் சமூகத்திற்கான கடமையையும் பொறுப்புடன் செய்து மக்களின் அன்பையும், இறைவனின் திருப்பொருத்தத்தையும் அடைவது’ எனும் தூர நோக்குடன் இந்த ஊடக சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அச்சு, இலத்திரனியல் ஊடகத் தளங்களில் செயற்பட்டு வருகின்ற ஊடகவியலாளர்களுடன் மாத்திரம் ஊடகத்துறை சார்ந்த பெருங்குடும்பத்தினரை மட்டுப்படுத்தாமல், அதற்கப்பால் இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களையும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நூலாசிரியர்கள், நூல்கள் மற்றும் இறுவெட்டு வெளியீட்டாளர்கள், இயல் இசை நாடகம் எனும் முத்துறைகள் சார்ந்த கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் போன்ற பல்வேறு தளங்களிலும், துறைகளிலுமாகச் செயற்பட்டு வருகின்ற சகலரையும் உள்வாங்கி இன, மத, மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் இச்சங்கத்தின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.

இச்சங்கத்தில் அங்கத்தவராக இணைந்து செயற்பட விரும்பும் மேற்குறிப்பிட்ட ஊடகங்கள் சார்ந்தோர், ‘பொதுச் செயலாளர், கிழக்கு ஊடக சங்கம், செல்வாநகர் கிழக்கு, ஆரையம்பதி – 02 எனும் தபால் முகவரியுடனோ அல்லது shirreibatti@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்பு கொண்டு அங்கத்தவர் விண்ணப்பப்படிவம் மற்றும் சங்கத்தின் உபவிதிகள் அடங்கிய யாப்புக் கோவை என்பவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

இச்சங்கத்தின் தலைவராக புவி. எம்.ஐ. றஹ்மதுல்லாஹ், உப தலைவராக ஏ. கங்காதரன், பொதுச் செயலாளராக வி. பத்மசிறி, உப செயலாளராக ஜெ. காமிலா பேகம், பொருளாளராக எஸ். சச்சிதானந்தகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, நிர்வாக சபை உறுப்பினர்களாக ஏ.ஜீ.எம். பளீல், திருமதி பஹ்மியா ஷெரீப், எம்.பி.எம். பைரூஸ், லோ. தினேஷ்ராஜ், பே. சபேஷ், த. இன்பராசா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 0777004774 மற்றும் 0779685943 என்ற தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

EMS 1

Published by

Leave a comment