புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் மற்றும் அதன் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Protest_logo[1]– இர்ஷாத் ரஹ்மதுல்லா

புத்தளம்: புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் மற்றும் அதன் செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள ஹிஜ்ரி 1400 ஞாபகார்த்த மினாராவுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது.

22 வருட காலம் தொடர்ந்து செயலாளராக பதவி வகிக்கும் தற்போதைய செயலாளர் பதவி விலக வேண்டும், கணக்குகள் சமப்பிக்கப்படவேண்டும், பொதுக்கூட்டம் கூட்டப்படவேண்டும், புத்தளம் வீர்கள் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 09 கால்ப்பந்தாட்ட கழகங்களில் 04 கழங்களை சேர்ந்த வீரர்களும் நிர்வாகிகளும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கில் போல்டன், விம்பிள்டன், த்ரீ ஸ்டார்ஸ், நியூ ஸ்டார்ஸ், லிவர்பூல், ட்ரிபல் செவன், நியூ பிரண்ட்ஸ், பேர்ல்ஸ் மற்றும் யுனைட்டட் ஆகிய 09 கழகங்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment