கல்குடா: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான விஷேட சந்திப்புக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தற்போது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் கல்குடா, கிண்ணியா மற்றும் முதூர் உள்ளிட்ட பிரதேசங்களில் முக்கிய சந்திப்புக்கள் சில நேற்று (05.03.2015) இடம்பெற்றன.
NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் MR. நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் ஆகியோர் இச்சந்திப்புக்களை நடத்தினர்.
கல்குடா, கிண்ணிய மற்றும் முதூர் பிரதேசங்களில் இயங்கும் NFGGயின் செயற்குழு மற்றும் அரசியற் குழு உறுப்பினர்களுடனான சந்திப்புக்களாகவே இவை நேற்று இடம்பெற்றன.
குறித்த பிரதேசங்களில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் மக்களில் எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றிற்கு அமைவாக NFGG தமது வேட்பாளர்களை முன்னிறுத்துவது தொடர்பில் இச்சந்திப்புக்களின்போது விரிவாக ஆராயப்பட்டன.
அத்தோடு மட்டக்களப்பு, திருகோணமலை பிரதேசங்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள NFGGயின் பிராந்திய மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, இதேபோன்ற சந்திப்புக்கள் சில வன்னி மாவட்டத்தின் சில இரதேசங்களிலும் கடந்த 04 மற்றும் 05ம் திகதிகளில் நடாத்தப்பட்டன.
இச்சந்திப்புக்கள் NFGGயின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களால் நடாத்தப்பட்டன.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 10 மாவட்டங்களில் NFGG பங்குபற்றும் என கடந்த 04.03.2015 அன்று கொழும்பில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment