கொழும்பு: இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டமானது 2014 ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்துள்ளது. விமான நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 32.4 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2013 மற்றும் 2014 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனம் 2013 ஆம் ஆண்டு 26.1 பில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்கியது. நிறுவனத்தின் நடவடிக்கை செலவானது 146.7 பில்லியனில் இருந்து 150.4 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. விமானப் பராமரிப்பு செலவுகள், விமானங்கள் திரும்பி வந்த மற்றும் விமானங்கள் மாற்றப்பட்டமை உள்ளிட்ட காரணங்களினால், 2014 ஆம் ஆண்டு 6.2 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த செலவுகள் 3.14 பில்லியனாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by
![Book-Travel-on-SriLankan-Airlines[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/book-travel-on-srilankan-airlines1.jpg?w=147&h=150)
Leave a comment