வாக்குறுதி வழங்கியதை போன்று காத்தான்குடி பிரதேச அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்தும் நடைபெறும்: தவிசாளர் எஸ். எச். எம். அஸ்பர்

unnamedஎம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதை போன்று காத்தான்குடி பிரதேச அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்தும் நடைபெறும். இவ்வாறு காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி தொடர்பாக நகர சபை தவிசாளர் எஸ். எச். எம். அஸ்பர் நேர்காணலின்போது தெரிவித்தார்.

ஏற்கனவே எமது திட்டமிடலின் அடிப்படையில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி  பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புள்ளாவின் ஏற்பாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்று வேலைகள் செய்து முடித்துள்ளோம். செய்து கொண்டுமிருக்கின்றோம். ஊர் வீதி,  டெலிகொம் வீதி,  பாம் வீதி அபிவிருத்திகளின் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு தற்போது ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு தாமதமாகியிருந்தன.

ஆனால் தற்போது வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் எம் ஹாசிம் இனால் இவ்வீதிகளுக்கான அனுமதி கிடைத்துள்ளது. இதன் பூர்வாங்க வேலைகள் இன்ஷாஅல்லாஹ் விரைவில் தொடரும் அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் 06ம் திகதி காத்தான்குடியில் அமைந்துள்ள நூதனசாலையை திறக்க எண்ணியுள்ளோம். இதற்கு ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை அழைக்கவுள்ளோம். அவர் கட்டாயம் இந்நிகழ்வில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கிறோம்

அதேபோல் ஆற்றங்கரைப்பகுதியில் குபா பள்ளிவாயல் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் மைதானம் மற்றும் பொழுது போக்கும் வசதிகள் தொடர்பான வேலைத்திட்டங்களை மக்களின் நன்மை கருதி செய்துகொண்டிருக்கின்றோம். குப்பைகள் கொட்டப்பட்ட இடம் என்றே தெரியாத அளவு இதை செய்து வருகின்றோம்.

வடக்கு தெற்காக 300 மீட்டர், கிழக்கு மேற்காக 700 மீட்டர் வரை ஆற்றை நிறப்பவேண்டியுள்ளது. இதற்காக பல்வேறு விமர்சனங்கள் எதிர்ப்புக்களை சந்தித்துள்ளதாகவும் இக் குப்பை பிரச்சினை தொடர்பில் நீதி மன்றம் வரை தற்போதும் சென்று கொண்டிருக்கின்றேன் எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

unnamed1

unnamed

Published by

Leave a comment