அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் ‘டெலன்ட் டேய்’ என்ற பெயரில் விஷேட மாணவ மன்றம்

al manar– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களினால் நடாத்தப்பட்டு வரும் மாணவ மன்றங்களின் தொடரில் 100வது மாணவர் மன்றம் ‘டெலன்ட் டேய்’ என்ற பெயரில் விஷேட மாணவ மன்றம் 05-03-2015 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி அல்-மனார் அர்ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அல்-மனார் மாணவ மன்றத்தின் மாணவ தலைவர் எம்.எஸ்.சஸ்னி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக அல்-மனார் இயக்குனர் சபை உப தலைவர் எஸ்.எம்.ஷாதுலி ஜேபி, அல்-மனார் நிறுவன பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில் உட்பட கல்லூரி ஆசிரியர்கள்,உலமாக்கள்,பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

al manar

இதன் போது அல்-மனார் மாணவர்களின் 100வது மாணவமன்றத்தையொட்டி அல்-மனார் மாணவர்களினால் அல்-மனார் பணிப்பாளர் சபைக்கு வழங்குவதற்கான நினைவுச் சின்னம் நிகழ்வின் பிரதம அதிதி காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மிலினால் அல்-மனார் பணிப்பாளர் சபைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

almanar

இதில் சிறப்புரையை அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் தஃவா பிரிவுத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் (மதனி) நிகழ்த்தினார்.

இங்கு அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

al manar musthafa

மேற்படி ‘டெலன்ட் டேய்’ என்ற பெயரில் இடம்பெற்ற விஷேட மாணவ மன்றம் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களினால் நடாத்தப்பட்டு வரும் மாணவ மன்றங்களின் தொடரில் 100வது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment