கான்பெரா: கான்பெராவில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்லா சதம் அடித்தார். இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 108 போட்டிகளிலேயே 20 சதங்களை அடித்தவர் என்ற சாதனையை அம்லா படைத்தார். இதற்கு முன் 133 போட்டிகளில் 20 சதங்களை விளாசியிருந்தார் இந்திய வீரர் விராட் கோலி.
இச் சதத்தின் மூலம் கோலியின் சாதனையை அம்லா முறிய டித்துள்ளார். மேலும் இப் போட்டியில் 159 ஓட்டங்களை குவித்ததன் மூலம், ஒரு நாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் அம்லா பதிவு செய்தார்.
தென் ஆபிரிக்க அணியில் 2வது விக்கெட் இணைப்பாட்டமாக அதிக ஓட்டங்களை குவித்து அம்லா- டு பிளிஸ்சிஸ் ஜோடி (247 ஓட்டங்கள்) சாதனை படைத்தது.
கடந்த போட்டியில் 400 ஓட்டங்களை குவித்த தென் ஆபிரிக்கா, இப்போட்டியிலும் மீண்டும் 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment