எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் NFGG பத்து மாவட்டங்களில் போட்டி

NFGG Press Meet Colombo 04.03.2015 (1)– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கொழும்பு: எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) பத்து மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்றஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல், புத்தளம், பதுளை மற்றும் வன்னி ஆகிய பத்து மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் தரமான மக்கள் பிரதிநிதிகளே நாட்டிற்கும் மக்களுக்கும் தேவைப்படுகின்றனர். நல்லாட்சி என்பது இனம், சமயம் எனபவற்றிற்கு அப்பால் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதாகும்.

NFGG Press Meet Colombo 04.03.2015 (1)

எனவேதான் நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்த வேண்டுமானால் நீதியின் அடிப்படையில் செயற்படக்கூடிய மக்கள் பிரதிநிதிகளே அடுத்த பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படல் வேண்டும். அவ்வாறானவர்கள் தெரிவு செய்யப்படும் போதுதான் இலங்கை ஐக்கிய மக்கள் சமாதானம் சக வாழ்வுமிக்க அபிவிருத்தியை நோக்கிய நல்லாட்சிமிக்க நாடாக முடியும்.

இந்த இலக்கோடுதான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலினை எதிர்கொள்ளவுள்ளது எனவும் மேற்படி மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

Published by

One response to “எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் NFGG பத்து மாவட்டங்களில் போட்டி”

  1. mohmedrislaam Avatar

    Individual or U N P

Leave a comment