இந்தியாவின் சாதனையை தகர்த்தது அவுஸ்திரேலியா! சாதனை விபரம்

aus– SHM

பேர்த்: ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொண்ட அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி செய்து 6 விக்கெட் இழப்புக்கு 417ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இது உலக கோப்பை தொடரில் ஒரு அணி அடிக்கும் அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக,

இந்தியா படைத்திருந்த 413 ரன்கள் என்ற சாதனை இதனால் தகர்க்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் நடுவேயான போட்டி பேர்த் மைதானத்தில் இன்று நடந்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கன் அணித் தலைவர் முகமது நபி, அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

aus

முதலில் துடுப்பாட்டம் செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்களை குவித்தது. உலக கோப்பை தொடர்களில், ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்திருந்ததே இதுவரையில் அதிகபட்ச ஸ்கோராக நீடித்து வந்தது. இன்று இந்தியாவிடமிருந்து அந்த சாதனை, அவுஸ்திரேலிய வசமாகியுள்ளது.

சாதனைகள்:

6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள்- அவுஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான்-2015

5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள்-இந்தியா-பெர்முடா-2007

4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள்- தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து-2015

5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள்- தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள்-2015

5 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள்-இலங்கை-கென்யா-1996. நடப்பு உலக கோப்பையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 3 முறை நானூறு ரன்கள் கடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

One response to “இந்தியாவின் சாதனையை தகர்த்தது அவுஸ்திரேலியா! சாதனை விபரம்”

  1. ACCORDING TO THE NEWS, இந்தியாவின் சாதனையை தகர்த்தது அவுஸ்திரேலியா! சாதனை விபரம்
    DATED 4/03/2015 — yourkattankudy.com

    REALLY, THE NAME OF AFGANISTAN’S CAPTAIN SHOULD BE CHANGED. AS WHEN SAYING THIS CAPTAIN’S NAME, WE MUST HAVE MUCH PURITY ON OUR PROPHET MOHAMMED SAL (P.B.U.H). NO ONE CAN HAVE OUR PROPHET’S NAME LIKE AS HE IS OUR THE MOST LOVING LIFE THAN ALL OF OTHERS. JUST SEE THIS SENTENCE MENTIONED IN THE ARTICLE… (https://yourkattankudy.com/2015/03/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/)

    ( நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கன் கேப்டன் முகமது நபி, அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். )

Leave a reply to MA Abahulfan Cancel reply