திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி முற்றாக நீக்கப்பட்டு தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இதனால் கிழக்கு மாகாணசபையில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோன்றியது.
எனினும் முஸ்லிம் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் 4 உறுப்பினர்களும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் தேசிய அமைச்சரவையை உருவாக் கியுள்ளனர்.
இந்த அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஆரியவதி கலப்பதி அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால், நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு தேசிய அரசாங்கமொன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது.இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சிப்லி பாரூக், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணி உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகிய மூவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
இதனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் கிழக்கில் ஆட்சியமைக்க உள்ளது.
தேசிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சி.தண்டாயுதபாணி கல்வி, கலாசார அலுவல்கள், தகவல் தொழில்நுட்ப, இளைஞர் அலுவல்கள், பாலர் பாடசாலை, விளையாட்டு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சராகவும், கி.துரைராஜசிங்கம் விவசாயம், நீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி, கால்நடை உற்பத்தி, மீன்பிடித்துறை, உணவு வழங்கல் மற்றும் விநியோக அமைச்சராக மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மன்சூர் சுகாதார, சமூக சேவைகள், நன்நடத்தை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஆரியவதி கலபதி வீதி, காணி அபிவிருத்தி, பெண்கள் அலுவல்கள் அமைச்சராகவும் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கிழக்கு மாகாணசபை தவிசாளராக ஐக்கிய தேசியக்கட்சியின் சந்திரதாஸ கலப்பதியும் பிரதி தவிசாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்திரகுமார் பிரசன்னாவும் பதவியேற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் உட்பட 20பேர் கையெழுத்திட்டு விருப்பத்தினை தெரிவித்திருந்தனர். எனினும் முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இரண்டு அமைச்சுப் பதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்கள் தாங்கள் வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 பேரும், முஸ் லிம் காங்கிரஸின் 7 பேரும், ஐக்கிய தேசியக்கட்சியின் 4 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 14 பேரும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒருவருமாக 37பேர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
Published by
![Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/eastern_province_flag_sri_lanka1.png?w=150&h=94)
Leave a comment