ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சகோதரர் ULMN முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்

mubeen hakeemஅன்புள்ள முபீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சென்ற 24 02 2015ம் திகதியன்று இரவு தங்களால் காத்தான்குடியில் கூட்டப்பட்ட கட்சிப் புணரமைப்பும், அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மிக உணர்ச்சி வசப்பட்டும், மிகவும் ஆவேசமாகவும் ஆக்குரோசமாகவும் சில கருத்துக்களை கூறியிருந்தீர்கள்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டேரைப் பார்த்து நீங்கள் ஒருவர் தான் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் (ஆரம்ப பவுண்டேசன் அங்கத்தவர்) என்று கூறினீர்கள் காத்தான்குடியில் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து நானும் ஒரு அடிமட்டத் தொண்டனாக இருந்து வந்துள்ளேன்.

காத்தான்குடியில் முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி அவசியம் என்ற விடயம் அஷ்ஷஹீட் அகமதுலெவ்வை அவர்களின் சிந்தனையில்; கருத்தாளம் ஏற்பட்ட போது அவருடன் பக்கபலமாக இருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் கட்சியின் ஸ்தாபக காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் சம்மந்தமாக தங்களிடத்தில் கீழ்கானும் கேள்விகளை கேட்க்க வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஏன் என்றால் நீங்கள் மாத்திரம் தான் ஸ்தாபக அங்கத்தவர் என்றும், ஆரம்பப்போராளி என்றும் தம்பட்டம் அடித்து வருகின்றீர்கள் இதனை தற்போதுள்ள கட்சியின் தலைவர், தவிசாளர் ஆகியோர்கள் நம்பலாம் காரணம் இவர்கள் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவர்கள். நான் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒரு அடிமட்டத் தொண்டனாக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகளில் ஒருவனாக இருந்து வந்துள்ளேன். அப்போதெல்லாம் கட்சி ஸ்தாபிக்ப்பட்ட காலகட்டத்தில் நடைபெற்ற எந்தவொரு நிகழ்சிகளிலும் நீங்கள் கலந்து கொண்டதை நான் கானவில்லை.

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி அவசியம் என்ற தாகம் ஏற்பட்டு காத்தான்குடியில் அஷ்ஷஹீட் அகமட்லெவ்வை அவர்களின் தலைமையில் பல கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம் மர்ஹூம் ஆர்ஆ அஸ்ரப் அவர்களுக்கும், ஒரு கட்சி அவசியம் என்ற சிந்தனைக்கும் எந்தவிதமான தொடர்பும் ஏற்படாத காலகட்டம். முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி அவசியம் என்ற சிந்தனை 1984ம் ஆண்டு தொடக்கம் 1985ம்ஆண்டு வரையுள்ள காலகட்டத்தில் வீரகேசரி பத்திரிகையில் பல ஆய்வுக் கட்டுரைகளை கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ஷஹீட் அகமட்லெவ்வை அவர்கள் எழுதிவந்தார்கள்.

அதன் பின்னர் மர்ஹூம் ஆர்ஆ அஸ்ரப் அவர்கள் ஒரு சட்டத்தரணியாக இருந்த காரணத்தினால் தனது வக்கீல் தொழில் சம்மந்தமாக பல வழக்குகளுக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வரவேண்டிய தேவையேற்பட்டதன் காரணமாகவும்.

ஏற்கனவே அஷ்ஷஹீட் அகமட்லெவ்வை அவர்களுக்கும், மர்ஹூம் ஆர்ஆ அஸ்ரப் அவர்களுக்கும் இடையிலிருந்த நட்பின் காரணமாகவும் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியில் கட்சி அவசியம் பற்றியும் இருவருக்குமிடையில் பல சந்திப்புக்கள் நடைபெற்றன. முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி அவசியம் என்பதை மர்ஹூம் ஆர்ஆ அஸ்ரப் அவர்களும் ஏற்றுக் கொண்டதனடிப்படையில் கட்சியை ஆரம்பிப்பதற்கான பல கூட்டங்கள் காத்தான்குடியிலும், கல்முனை பகுதியிலும் மாறி மாறி நடைபெற்றன.

இப்போது நான் விசயத்திற்கு வருகின்றேன் நீங்கள் மாத்திரம் தான் ஸ்தாபக அங்கத்தவரென்று தம்பட்டம் அடிக்கின்றீர்கள் அப்டியானால் கட்சிக்கு பெயர் வைக்கப்பட்ட காலத்தில் கட்சி அங்கத்துவப்படிவம் தயார் படுத்தப்பட்டு காத்தான்குடியில் வீடு வீடாக வினியோகிக்கப்பட்ட போது அதில் ஈடுபட்ட ஆரம்பப் போராளிகளின் பெயர் பட்டியலை தருகின்றேன் இதில் நீங்கள் இருக்கி;ன்றீர்களா என்பதைப் பாருங்கள்.

01 RTM. அனஸ் (ஆசிரியர்)
02 AM. முபீன் BA (முன்னால் சுங்க அதிகாரி)
03 மர்சூக் அகமட்லெவ்வை (கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் மகன்)
04 MMA. றகீம் (நான்)
05 MA அஸீஸ் (ஈரான் அஸீஸ்)
06 மர்ஹூம் அன்வர் சரீப்தீன் (ஹிஸ்புள்ளாவின் மைத்துனர்)
07 மர்ஹும் UA அஸீஸ் ( சட்டத்தரணி அப்துல் ஜவாதின் மருமகன்)
08 மர்ஹூம் PM ஹனீஸ் (ஆட்டிஸ்ட்)
09 MA. கபூர் (அஸீஸ் மாமா)

மேற்குறிப்பிட்ட ஆரம்பப்போராளிகளில் நீங்கள் எச்சந்தர்பத்திலும் கலந்து கொள்லவில்லை என்பது இதன் மூலம் நிரூபிக்க முடிகின்றது அப்படியிருக்கையில் நீங்கள் மாத்திரம் தான் ஆரம்பப் போராளி என்று மார்பு தட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். இது விரால் இல்லாத குளத்திற்கு குறட்டை அதிகாரியாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. நான் கட்சி சம்மந்தமாக சில கேள்விகளை கேட்க்கவிரும்புகின்றேன். நீங்கள் உண்மையான கட்சியின் ஆரம்பப் போராளியாக இருந்தால் எனது கேள்விகளுக்கு பதிலளிப்பீர்கள் என்று எதிர் பார்க்கின்றேன்.

கேள்விகள்

01 கட்சியின் ஆரம்பக் கூட்டம் காத்தான்குடியில் எங்கு நடைபெற்றது? இதற்கு தலைமை தாங்கியவர் யார்?

02 கட்சியின் ஸ்தாபக செயலாளர் யார்?

03 கட்சியின் ஸ்தாபக பொருலாளர் யார்?

04 கட்சிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என பெயர் வைத்தவர் யார்?

05 கட்சிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என பெயர் வைக்க காரணம் என்ன?

06 ஆரம்பத்தில் கட்சியை உருவாக்கியவர்கள் எத்தனை பேர்?
இக்கேள்விகளுக்கு பதிலை யாரிடத்திலும் இரவல் வாங்கமாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

அடுத்து கட்சிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என பெயரிடப்பட்ட போது கட்சியின் ஸ்தாபக தலைவர் அஷ்ஷஹீட் அகமட்லெவ்வை அவர்கள் இக்கட்சியை பிராந்திய ரீதியாக வட, கிழக்கில் வைத்துக்கொள்வோம் என்றும் இக்கட்சிக்கு மர்ஹூம் ஆர்ஆ அஸ்ரப் அவர்கள் தலைவராக இருக்கட்டும் என்று ஆலோசனை கூறினார்கள். இதனை மர்ஹூம் MHM. அஸ்ரப் அவர்கள் மறுத்ததோடு கட்சியை தேசிய ரீதியாக கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறினார்கள்.

அதற்கு கட்சியின் ஸ்தாபக தலைவர் அஷ்ஷஹீட் அகமட்லெவ்வை அவர்கள் அப்படியானால் கட்சியின் தலைவராக முன்னாள் கல்வியமைச்சர் மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தலைவராக நியமிப்போம் என ஆலோசனை கூறினார்கள் காரணம் இக்கட்சியை அஷ்ஷஹீட் அகமட்லெவ்வை அவர்கள் உருவாக்கிய போது பல ஆலோசனைகளை மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் வழங்கியிருந்தார்கள் அத்தோடு அக்கால கட்டத்தில் தேசிய ரீதியாக மர்ஹூம் ஆர்ஆ அஸ்ரப் அவர்கள் பிரபல்லியம் இல்லாத காரணத்தினாலும் இக்கருத்தை முன்வைத்தார்கள் அக்கருத்தினை முற்றாக மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் மறுத்த காரணத்தினால் கட்சியின் ஸ்தாபக தலைவர் அஷ்ஷஹீட் அகமட்லெவ்வை அவர்களுக்கும், மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்குமிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சில காலம் பிரிந்து இருந்தார்கள்.

அப்போது தான் கட்சியில் பாரிய சதி ஒன்று அரங்கேரியது கட்சியின் ஸ்தாபக தலைவர் அகமட்லெவ்வை அவர்களையும், அவர் நேசித்த காத்தான்குடி மக்களையும் பிரித்தாலும் தந்திரத்தை மர்ஹூம் MHM. அஸ்ரப், மர்ஹூம் மருதூர் கனி, சேகுஇஸ்ஸதீன், சித்தீக் (விரிவுரையாளர்), ஸரூக் (சட்டத்தரணி) போன்றவர்கள் கையாளத் தொடங்கினார்கள். இந்த சதிவேலையில் காத்தான்குடியிலுள்ள சில இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர் மர்ஹூம் MHM. அஸ்ரப் அவர்களும் அவர்களுடைய சகாக்களும் தீட்டிய சதியில் பயன்படுத்தப்பட்ட நபர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறந்து விடாதீர்கள்.

தற்போது காத்தான்குடியை பொறுத்தவரையில் கட்சியின் சகல நடவடிகைக்கும் நானே பொறுப்பு என்றும், என்னை மீறி யாரும் எதனையும் செய்ய முடியாது என்றும் அக்கூட்டத்தில் ஆனவத்துடன் பேசியுள்ளீர்கள் உங்களுக்கு கட்சியால் வழங்கப்பட்ட சகல பதவிகள் ஊடாக காத்தான்குடியில் கட்சி வளர்ச்சியடைந்துள்ளதா? அல்லது அழிந்துள்ளதா? சகோதரர் ஹிஸ்புள்ளாஹ் கட்சியை விட்டு சென்ற போது மிகவும் அழிவு நிலையில் இருந்த கட்சியை ஸ்தாபக தலைவரின் மகன் மர்சூக் அகமட்லெவ்வை அவர்கள் கட்சியில் இணைந்து மிகவும் பலவீனமாக இருந்த கட்சியை சுமார் 7500 வாக்குகளைக் கொண்டதாக ஆக்கித் தந்தார்கள்.

தற்போது உங்களின் தலைமையில் காத்தான்குடியில் கட்சியின் சகல பொறுப்புக்களும் நான் தான் என்று கூறுகின்ற நிலையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது போன்று கட்சியின் தற்போதைய நிலவரம் 1424 வாக்குகளாக மாறியுள்ளது. (இது கடந்த நகர சபையின் தேர்தல் பெறுபேறாகும்)

உங்களுக்கு கட்சியின் பெயரால் கிடைத்த மாகாண சபை உறுப்பினர் பதவியைக் கொண்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியை வாழ்வாதார திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து அதனை முபீன் பௌண்டேசன் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கி கட்சியை அழித்தவர் நீங்களே அது மாத்திரமின்றி கடந்த பொதுத் தேர்தலின் போது கட்சியின் தவிசாளரிடமிருந்து பெரும் தொகைப் பணத்தை பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டதோடு தவிசாளரின் பணத்தை பயண்படுத்தி தவிசாளருக்கு எதிராக சதி செய்து தேர்தல் வேலை செய்ததோடு தவிசாளரையும் காத்தான்குடி கட்சிப் போராளிகளையும் பிரித்து கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவரும் நீங்களே என்பதை மறந்து விடாதீர்கள் அதன் பின்னர் தனக்கு அதிகாரம் வழங்கப்பட தாமதித்த நேரத்தில் கட்சிப் போராளிகளையும் தனது ஆதரவாளர்களையும் கூட்டி அக்கூட்டத்தில் தலைவர், தவிசாளர் ஆகியோர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளை பகிரங்கமாக மிகவும் கீழ்தரமான முறையில் விமர்சித்து கட்சிப் போராளிகளுக்கு கட்சி மீதும் தலைமை மீதும் இருந்த நல்லபிப்பிராயத்தை இல்லாது செய்து கட்சியை அழித்தவரும் நீங்களே அதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறையவுள்ளது தேவையேற்படும் போது அதனை வெளியிடுவேன்.

தங்களது சுயலாபத்திற்காக தலைவரைப் பற்றி தவிசாளரிடமும் தவிசாளரைப் பற்றி தலைவரிடமும் மாறி மாறி அள்ளிவைத்து மூட்டடி சாட்டடி செய்து சகுனி வேலை பார்த்து அதன் மூலம் உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு தவிசாளர் பஸீர்; சேகுதாவூத் அவர்களிடம் பதவிகளையும் செகுசு வாகனங்களையும் பெற்றுக் கொண்டு விட்டு நாவுகூசாமல் நன்றி கெட்ட தனமாக கட்சியை அழித்தது தவிசாளர் பஸீர் சேகுதாவூத் தான் என்று தலைவரிடம் இப்போது அள்ளிவைத்து அவரிடம் பதவியும் செகுசு வாகனமும் பெற்றுக் கொண்டுள்ள நீங்கள் பஸீர் சேகுதாவூத் அவர்களால் காத்தான்குடியிலுள்ள கட்சிப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட ரூபா 500.000.00 (ஐந்து லட்சம்) பணத்தை தனது தேர்தல் தொகுதியான நூராணிய மாவத்தையிலுள்ள ஒரு சங்கத்தின் பெயருக்கு பெற்று, உங்களது குடும்பத்தினருக்கும், விசுவாசிகளுக்கும் பகிர்ந்தளித்து ஊரா கோழி அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதினீர்கள்.

இறுதியாக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி மகிந்தயையா, அல்லது மைதிரியையா ஆதரிப்பது என்று தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்காகவே உருவாகியுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டு கட்சித் தலைமை விடுகின்ற தவறுகளால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு காத்தான்குடியில் ஆதாரவு கூடிக்கொண்டு போவதாக உரையாற்றினீர்கள் இதுதானா கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளரின் கொள்கைபரப்பு?

நீங்கள் நகர சபையில் தவிசாளராக இருந்த காலத்தில் உங்களது சுயநலத்திற்காக ஒரு தொகைப்பணத்தை கொமிசனாக பெறுவதற்கு 180 0000.00 (ஒரு கோடியே எண்பது லட்சம்) ரூபாவை கடனாக பெற்று பதுறியா வீதி, மற்றும் டீன் வீதிகளை புனரமைத்தீர்கள் ஆனால் அவ்வீதிகள் ஓரிரு வருடத்தில் முழுமையாக இருந்த இடமும் இல்லாது அழிந்து விட்டதுடன் அக்கடனுக்காக மாதம் ஒன்றுக்கு 350.000.00 மூன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட தொகையையும் மாதம் ஒன்றுக்கு 100.000.00 ஒருலட்சம் ரூபாவை வட்டியுமாக எதிர் வரும் 2021ம் ஆண்டு வரையும் காத்தான்குடி நகர சபை செலுத்தி வருகின்றது இந்த சாபக்கேட்டை இந்த ஊருக்கு ஏற்படுத்தியதோடு காத்தான்குடி மக்களையும் அவர்களுடாக தெரிவு செய்யப்படும் நகர சபை நிருவாகத்தையும் வட்டிக்காரர்களாக மாற்றி விட்டு இன்று கட்சிக்காரர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுத்து கிலாபத்தாட்சி; நடத்தி அதன் மூலம் கட்சி வளர்க்க போவதாக தெரிவித்து வருகின்றீர்கள் குறித்த கடன் விடயமாக கடந்த 26 02 2015ம் திகதிய நகர சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது

கட்சியின் தலைவர் தலைவர் MHM. அஸ்ரப் அவர்கள் அகாலமரணமடைந்த போது கட்சிக்கு புதிய தலைவராக யாரை நியமிப்பது என்று தலைமைத்துவப் போட்டி உருவான போது அதில் மூவரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது அதில்,

01 தற்போதைய தலைவர் றஊப் ஹக்கீம்
02 பேரியல் அஸ்ரப் 03 ஹிஸ்புள்ளாஹ் இவர்களில் தகுதியானவர் ஹிஸ்புள்ளாஹ் தான் என காத்தான்குடி மத்திய மகா வித்தியாலத்திற்கு முன்னால் நடைபெற்ற ஒரு பிரச்சார மேடையில் பகிரங்கமாக கூறி விட்டு இப்போது ஹிஸ்புள்ளாஹ் தான் காத்தான்குடியில் கட்சியை அழித்தார் எனக் கூறித்திரிவதோடு தற்போது தற்போதைய தலைவருக்கு மிக விசுவாசமானவன் நானே எனக் கூறித்திரிகின்றீர்கள்

இவ்வாறு தங்களுக்கான பட்டம் பதவிகளை தற்போதைய தலைவரிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்காக பஞ்சோந்தியாக முன்னுக்குப்பின் முரனாக பேசும் நீங்கள் எவ்வாறு ஆரம்ப ஸ்தாபக உறுப்பிராக உள்ளீர்கள் என்பதை தயவு செய்து எனனக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வண்ணம்

MMA. றகீம் JP (றகீம் காக்கா)

Published by

3 responses to “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சகோதரர் ULMN முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்”

  1. mohamedrislan Avatar

    K];ypk; fhq;fpu]pd; KjyhtJ Njh;jy; fhyk; 1988 k; Mz;bypUe;J Muk;gkhfpaJ. md;W njhlf;fk; ,d;W tiu eilngw;w midj;J Njh;jy;fspYk; ULMN KgPd; mth;fspd; gq;fspg;G fhzg;gl;LtUtjid ahuhYk; kWf;f KbahJ.
    Mdhy; NkNy fhl;lg;gl;l gl;baypd; 09Ngh;fspy; 05> 06k; ,yf;fj;jth;fs; jtph;e;j Vida midtUk; 1988 k; Mz;L eilngw;w ghuhSkd;wj; Njh;jypy; #upad; rpd;dj;Jf;F thf;fspj;J K];ypk; fhq;fpui] Neubahf mopf;f Kw;gl;lth;fs; vd;gjid ,e;j fhj;jhd;Fb kz; vd;Wk; kwf;fhJ.
    Mdhy; uTg; `f;fPk; te;j gpd;dh; `p];Gy;yh`;tpid ePf;;fpa gpd;dh;jhd; ePq;fs; cs;Eioe;jPh;fs; vd;gjid epidj;Jg; ghh;f;f Ntz;Lk;. mj;Jld; KgPid Ntz;Lnkd;W mtkjpj;J `f;fPkplkpUe;J jpizf;fs jtprhsh;> jiyth; gjtpfisg; ngWtjw;F tPzhf mwpf;iffis tpLtJ vt;tpjj;jpYk; nghUj;jkpy;iy vd;gjid mwpe;J nfhs;s Ntz;Lk;.

  2. அடங்காச் சோனகன் Avatar
    அடங்காச் சோனகன்

    காத்தான்குடி மக்களை பிரித்தாலும் தந்திரத்தை மர்ஹூம் MHM. அஸ்ரப், மர்ஹூம் மருதூர் கனி, சேகுஇஸ்ஸதீன், சித்தீக் (விரிவுரையாளர்), ஸரூக் (சட்டத்தரணி) போன்றவர்கள் தீட்டிய சதியில், பயன்படுத்தப்பட்ட அந்த காத்தான்குடியிலுள்ள சில இளைஞர்கள் யார் ?

  3. Those names mentioned as initial members are for name sake only. Those are the people who brought TELO and LTTE to Kattankudi including you Raheem kaka to destroy SLMC and home guards in those days.
    Late Ashraf did the right thing saved Muslim community from your people. So the total credit go to those youth who brought the SLMC to Kattankudi. Not the current SLMC activists anyone including Mubeen and Salma.
    Can you names those youth. We have to thank them. Your help will be appreciated.

Leave a reply to அடங்காச் சோனகன் Cancel reply