குருனாகல்: கல்குடாவில் இருக்கின்ற நண்பர்கள் வட்டத்துக்கெல்லாம் முன்மாதிரியான முறையில் தனது திட்டங்களை தூர நோக்கடிப்படையில் எதிர்காலத்தில் வெற்றியடையும் கருப்பொருளோடு சமூகத்தில் முக்கிய பங்காற்றிவரும் கல்குடாவின் 1992ம் ஆண்டு கல்குடா நண்பர்கள் வட்டத்தின் 12ஆவது பொதுக்கூட்டமும் ஆண்டரிக்கை சம்பந்தமான ஒன்று கூடலும் ஞாயிற்றுக் கிழமை (01.02.2015) குருனாகலில் இடம்பெற்றது.
கல்குடா பிரதேசத்தில் வியாபாரம், மீன்பிடி, விவசாயம் போன்ற துறைகளோடு சேர்த்து எல்லா துறைகளிலும் எதிர்காலத்தில் எவரும் நட்டமடையாத வகையில் தங்களது துறைகளை முன்னெடுத்து செயற்படுத்தும் வகையில் இஸ்லாமிய வட்டியில்லா நிதி நிறுவனம் ஒன்றினை நிறுவுவதன் பொருட்டு முதற்கட்ட நடவடிக்கையாக நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் உறுப்பினர்களிடம் மாதம் ஒன்றிற்கு 500 ரூபா முதல் 5000 ரூபா வரையிலான பங்குகள் வினியோகிக்கப்பட்டு வந்ததன் அடிப்படையில் குறுகிய ஒரு வருடத்துக்குள் 700,000 ரூபாய்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்த வருடத்துக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கச் செய்வது அல்லது எதிர்காலத்தில் நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் இதன் உன்னத நோக்கமாக இருக்கின்ற இஸ்லாமிய வட்டில்லா நிதி நிறுவனத்தை நிறுவுதல் என்ற இலட்சியத்தை அடைந்து கொள்வதே மிக முக்கிய திட்டமாக காணப்படும் அதே சமயத்தில் வினியோகிக்கப்பட்டு திரட்டப்பட்டுள்ள பணத்தொகையினை வருமானம் ஈட்டக்கூடியதாக ஏதாவது ஒரு துறையில் முதலீடு செய்யப்பட்டு தேவைப்படுகின்ற பணத்தொகையினை பெற்றுக்கொள்வதும் இதன் வட்டியில்லா நிதி நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லும் அடிப்படை அம்சங்களில் அடங்குகின்றது.
மாவட்ட நீதிபதி, வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நிறுவாக உத்தியோகத்தர்கள், நாட்டில் உள்ள முக்கிய கம்பனியின் கணக்கறிஞர், பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பட்டதாரிகள், வியாபார முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், உலமாக்கள், ஜாமியா நளீமியாவில் பட்டம் பெற்று வெளியேறியவர்கள், அல்-அஸ்கர் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற உலமாக்கள், சமூக சிந்தனையாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என பல துறைகளைச் சார்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருப்பது மட்டுமல்லாமல் சாதாரணமாக அன்றாடம் கூழித்தொழில் செய்து தங்களது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்பவர்களும் உறுப்பினர்களாக இருப்பதானது இவ்வமைப்பு எதிர்காலத்தில் அல்லாஹ்வின் உதவியோடு தனது திட்டங்களை தங்கு தடையின்றி அடைந்து கொள்வதற்கும், வீறு நடை போட்டுச் செல்வதற்கும் முக்கிய சக்தியாகவும், பின்னூட்டிகளாகவும், பக்கபலமாகவும் அமைந்திருக்கின்றது.
சமூகத்தில் ஒரு துறையினை மட்டும் அபிவிருத்தி செய்வது அல்லது முன்னெடுப்பது என்று நின்று விடாமல் சமூகத்தின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி தன்னிறைவு பெற்ற சமூகமாக கல்குடா சமூகத்தை எதிர்காளத்தில் கட்டியெழுப்புவதனை அடிப்படை நோக்கமாக கொண்டே நண்பர்கள் வட்டத்தின் அடிப்படை குறிக்கோள் அமைந்திருப்பது முக்கிய கருப்பொருளாக இருப்பதனை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
இதனடிப்படையிலேயே ஜாமியா நளீமியாவின் பட்டதாரி ஜுனைட் நளீமியை கடந்த ஓட்டமாவடி பிரதேச சபைத் தேர்தலில் களமிறக்கி அதில் வெற்றியும் கண்டது. எதிர்கால கல்குடா சமூகத்துகு மிக முக்கிய தேவையாக கருதப்படுகின்ற சிறந்த அரசியல் கலசாரத்தையும் அரசியல் தலைமையையும் சமூக சிந்தனைமிக்கதாக உருவாக்குவதே இதன் முக்கிய திட்டங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.
நண்பர்கள் வட்டத்தின் தலைவர் எம்.ரி. அன்வர் தலைமையில் இடம்பெற்ற இவ் ஒன்கூடலில் எம்.எஸ். இஸ்மாயில் கூட்டரிக்கையினை வாசித்ததோடு கணக்கறிக்கையினை எம்.எம். முபாறக் சமர்பித்தார். அதைத் தொடர்ந்து நண்பர்கள் வட்டம் கடந்து வந்த பாதையும் எதிர்கால திட்டங்களும் எனும் தலைப்பில் எம்.எம்.நவாஸ் ஆசிரியர் உரையாற்றினார். நண்பர்கள் வட்டத்தின் சார்பாக விஸேட உரையினை நாட்டில் முக்கிய கம்பனியாக கருதப்படுகின்ற செரண்டிப் நிறுவனத்தின் சிரேஸ்ட கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியால் நிகழத்த நன்றி உரையினை எம்.ஐ.எம். இஸ்ஸதீன் ஆசிரியர் வழங்கினார்.
Published by




Leave a comment