காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இராஜாங்க சுகாதார அமைச்சர் ஹசன் அலி விஜயம்

hospital11– டீன் பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இராஜாங்க சுகாதார அமைச்சர் ஹசன் அலி (பா.உ) அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விசேட குழுவொன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 25.02.2015ம் திகதி (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு வருகை தரவிருந்தது.

அமைச்சர் ஹசன் அலி (பா.உ) அவர்கள் அன்றைய தினம் முல்லைத்தீவிற்கு முக்கிய விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்ததால் இந்நிகழ்வானது தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டது. மேலும் இந்நிகழ்வானது இம் மாதம் ௦9ம் திகதி திங்கட்கிழமை மதியம் 12.௦௦ மணிக்கு இடம்பெறும்.

Published by

Leave a comment