காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு எமது காத்தான்குடியைச் சேர்ந்த Dr. S.M.B.M. றூமி அவர்கள் மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு இன்று காலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய Dr. M.S.M. ஜாபிர் அவர்கள் தனது ஒரு வருட மேற்படிப்புக்காக தாய்லாந்து சென்ற பின்னர், சிரேஷ்ட வைத்தியர் Dr. T. கௌரிசங்கரன் அவர்கள் பதில் வைத்திய அத்தியட்சகராக கடந்த 10 மாதங்கள் சிறப்பாக கடமையாற்றி வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளை நிறைவேற்றியிருந்தார்.
தற்போது கடமையேற்றுள்ள Dr. S.M.B.M. றூமி அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய பின்னர் இங்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment