பழுலுல்லாஹ் பர்ஹான்
உன்னிச்சை: வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தின் முஹைதீன் ஜூஆப் பள்ளிவாயல் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பள்ளிவாயலின் ஆலோசகர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் தற்காலிக கொட்டகையில் இப்பள்ளிவாயல் இயங்கி வந்தது. இதனால் அடை மழை காலங்களில் பல்வேறு அசௌகரீயங்கள் எற்பட்டன.
பள்ளிவாயலின் நிருவாகமும் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச் சங்கத்தின் நிருவாகமும் இணைந்து எடுத்துக் கொண்ட அர்ப்பணிப்பு மிக்க முயற்சியினால், பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பிகளின் முழுமையான அனுசரனையோடு (அமோனா சீட்டினால்) மிகவும் சிறப்பாக அண்மையில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது .
இதனால் சுற்றுலாவுக்காக வருகின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கும், சேனைப் பயிர்ச்செய்கைகளை செய்து ஜீவனோபாயத்தை கடத்தி வாழ்ந்து வருகின்ற ஏழை விவசாயிகளுக்கும், அண்மைக் கிராமங்களில் கடமைபுரியும் அரச தனியார் ஊழியர்களுக்கும் இறை கடமைகளை நிறைவேற்றுவதற்கு இம் மஸ்ஜித் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது .
இப்பள்ளிவாயலுக்கு நிரந்தர, மகல்லாஹ் வருமானங்கள் எதுவும் இல்லாததனால் ஒரு ஸ்திரமாக பேஸ் இமாம் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாமல் நிருவாகம் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது. இது விடயமாக நலன் விரும்பிகள் தயவுசெய்து கரிசனை காட்ட வேண்டும் எனவும் ஆலோசகர் பணிவான வேண்டுகோள் ஒன்றையும் தெரிவித்தார்.
மேலும் இப்பிரதேச ஏழை சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள் தொழிலுக்கு தேவையான தண்ணீர் மோட்டார் போன்ற தளர்பாடங்கள் இல்லாமலும் மிகவும் கஸ்டத்தை கோடைகாலங்களில் எதிர் நோக்கி வருகின்றார்கள் இதனால் கையிலிருக்கும் முதலையே இழக்க வேண்டிய நிலைகளும் இவர்களுக்கு ஏற்படுகிறது.இதற்காகவும் தங்களது சதக்காவில் இருந்து இவர்களுக்கு உதவ முன்வருவதன் மூலம் இக்கிராம ஏழை மக்களினது துஆவினை பெற்றுக் கொள்ள முடியும் இக்கிராமும் செழிப்பைடையும் எனவும் இல்மி அஹமட்லெவ்வை மேலும் தெரிவித்தார் .
Published by

Leave a comment