இலங்கை அணியை கிண்டல் செய்த ஐ.சி.சி.

cricketவெலிங்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித்தலைவர் மத்தியுஸின் தவறான மேன் முறையீட்டைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை அணியை கிண்டல் செய்துள்ளது. நியுசிலாந்தின் வெலிங்டன் நகரில் நேற்று நடந்த போட்டியின் 39ஆவது ஓவரில் ஜோ ரூட்டுக்கு சுரங்க லக்மால் பந்து வீசினார்.

அந்த ஓவரின் 5ஆவது பந்து, ஜோ ரூட்டின் முன்னங்கா லில் பட்டது. இதனையடுத்து எல்.பி.டபிள்யு முறையீடு செய்யப்பட்டது. களநடுவராக இருந்த புரூஸ் ஒக்சன்போர்ட் ஆட்டமிழக்கவில்லை என அறிவித்தார். ஆனால் இதை ஒத்துக் கொள்ளாத இலங்கை அணித்தலைவர் மெத்யுஸ் 3ஆவது நடுவரிடம் முறையிட்டார்.

இதை 3ஆவது நடுவர் சோதித்து பார்க்கையில் பந்து எங்கோ விலகிப் போவது நன்றாக தெரிந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டமிழக்கவில்லை என அறி வித்தார். இதனால் இலங்கை வீரர்களுக்கு ஏமாற் றம் தான் கிடைத்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்த உலகக் கிண்ணத் தொடரில் இது மோசமான முறையீடா?” என்று பதிவு செய்துள்ளது.

Published by

Leave a comment