குருநாகலயிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
குருநாகல்: கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தின் கீழ் ஆடை உற்பத்தி தொடர்பிலான பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவம் இன்று (2015-03-01) வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் தெள்ளியாகொன்னயில் இடம் பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும், சமுர்த்தி, வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கௌரவ அதிதியாகவும் மற்றும் இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகத்தின் தலைவர் நவாஸ் முஸ்தபா, ஆட்பதிவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எஸ்.எல்.நசீர், பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் எண்ணக்கருவுக்கு அமைய 3000 யுவதிகளுக்கு இலவச தையல் பயிற்சிகளை வழங்கும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இதுவாகும்.
Published by



Leave a comment