அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் பரிசளிப்பு விழா

madrasa– நமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் 28 வது வருடாந்த பரிசளிப்பு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் காலை 11.30 மணி வரை காத்தான்குடி.02 ஹிழ்றிய்யா மஸ்ஜிதில் நடைபெற்றது.

ஆல்குர்ஆன் மத்ரஸாக்கள் பரிசோதகர் மௌலவி அல்ஹாபிழ் HM.ஸாஜஹான்(BA) அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற மேற்படி நிகழ்வு காத்தான்குடி பிரதேசத்தில் அல்குர்ஆன் ஓதலில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற முகம்மது காமில் பாத்திமா ஹானியாவின் கிறாஅத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் ஸதாபக உறுப்பினர் மௌலவி MI. ஆதம்லெவ்வை (பலாஹி) (BA) அல்ஹாஜ் MTM, காலித் J.P, மௌலவி AM. அப்துல் காதர் (பலாஹி,) மௌலவி அல்ஹாஜ் AGM. அமீன் (பலாஹி), அல்ஹாபிழ் MA. ஹாலித் ஹஸன் (பலாஹி), செயலாளர் SLA.கபூர் BCom, மற்றும் உலமாக்கள் கதீப்மார்கள் குர்ஆன் மத்ரஸாக்களின் உஸ்தாதுமார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வின் போது சுமார் 205 மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் மொத்தமாக சித்தியடைந்த 909 மாணவர்களில் முதல் 03 இடங்களைப் பெற்று பொண்ணாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டவர்களின் விபரம்.

01. முகம்மது ஜலீல் ஆயிஷா இஸ்ஸத்(195 புள்ளிகள்) தாறுஸ்ஸலாம் குர்ஆன் மத்ரஸா, காத்தான்குடி.06

02. முகம்மது காமில் பாத்திமா ஹானியா (191 புள்ளிகள்) அல் மத்ரஸதுல் ஹிழ்றிய்யா காத்தான்குடி.02

03. முகம்மது இர்பான் மர்யம் ஸுபைதா (189 புள்ளிகள்) அந் நூர் அறபுப் பாடசாலை காத்தான்குடி.03

Published by

Leave a comment