ஏறாவூர்: முதலமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள ஹாபிஸ் நசீர் அஹமட்டை வரவேற்பதற்காக முதலமைச்சரின் சொந்த ஊரான ஏறாவூரில், அரசியல் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு மக்கள் அலையாய் திரண்டெழுந்து முதலமைச்சரை வரவேற்றமையானது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஏராவூர் மக்களின் ஒற்றுமை எனும் அரசியல் கலாச்சாரத்தை வெள்ளிச்சம் போட்டுக்காட்டும் முக்கிய செய்தியாகவே பலராலும் பார்க்கப்பட்டது.
ஏறாவூர் மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு அருகாமையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இரண்டு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்துக்கு வீதி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட முதலமைச்சர், பாதையின் இரு மருங்கிலும் பொது மக்களால் மாலை அணிவித்து, மலர்கள் தூவி வரவேற்கப்பட்டதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
கலந்து கொண்ட மக்கள் வெள்ளமானது தங்களது பிரதேசத்துக்கு மாகாணத்தில் முக்கிய அரசியல் பதவியக கருதப்படும் முதலமைச்சு பதவி தங்களது ஊரான ஏறாவூருக்கு கிடைத்தமையிட்டு மகிழ்ச்சி பொங்கியவர்களாக காணப்பட்டதுடன், எதிர்காலத்தில் புதியதோர் அரசியல் தலைமையை ஏற்றுக்கொள்வதற்கான உணர்ச்சி பொங்கிய ஊர்வலமாக அமைந்திருந்தது. மறுபக்கத்தில் மாற்றத்தை நோக்கிய பயணமாக அலையாய் திரண்டெழுந்த மக்கள் ஒன்று கூடலாக இருந்தினை முக்கிய கருப்பொருளாக குறிப்பிடலாம்.
இங்கு முக்கிய விடயமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டுவரும் சிறீலங்க சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகான சபை உறுப்பினரான அலிசாஹிர் மெளலான மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாரூக் ஆகியோர்கள் இவ்வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டமையானது மக்கள் அலையாக திரண்டெழுவதற்கு முக்கிய காரணியாக காணப்பட்டது.
மேலும், முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் தனது அரசியல் முனெடுப்புக்களை எதிர்காலத்தில் இஸ்தீரப் படுத்திக் கொள்ளும் புதியதோர் அரசியல் மறுமளர்ச்சியகவே ஏராவூரில் அரசியல் முக்கியஸ்தர்களால் பார்க்கப்படுகின்றது.
இவ்வைபவத்துக்கு மாகான சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஜே. லாஹிர், அலி சாஹிர் மெளலான, சிப்லி பாரூக், எம்.அன்வர், அட்டாளச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோர்களுடன் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எஸ்.சார்ள்ஸ் கலந்து கொண்டதுட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் பிரதேசத்தின் அரசியல் முக்கியஸ்தர்கள், புதிஜீவிகள், பொதுமக்கள் மற்றும் கல்குடா, காத்தான்குடி பிரதேச மக்கள் என பலரும் ஊர்வலத்திற்குப் பிற்பாடு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
Published by




Leave a comment