சமாதான நீதவானாக வஜூறுதீன் முகம்மது ரஅசி நியமனம்

jpரைஸ்

கிண்ணியா: கிண்ணியாவைச் சேர்ந்த வஜூறுதீன் முகம்மது ரஅசி சமாதான நீதவானாக திருகோணமலை மாவட்ட மேன் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதவான் கௌரவ T. J. பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பெரிய கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட வஜூறுதீன், யுனைதீன் ஹாஜியார் றாலியா உம்மா தம்பதிகளின் புதல்வாரன இவர்  தனது ஆரம்பக்கல்வியை கிண்ணியா அரசினர் ஆண்கள் பாடசாலை வாட்டுப்பள்ளியிலும் உயர்தர கல்வியை கிண்ணியா தேசிய பாடசாலையிலும், இதழியல் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் கல்விகற்ற இவர் இந்தியாவின் அழகப்பா பல்பகலைக் கழக இறுதியாண்டு மாணவருமாவார்.

கிண்ணியா நகரசபையில் நிரந்தர நியமனம் பெறுவதற்கு முன்னர் இலங்கையில் மிகச்சிறந்த ஊடக வலையமைப்பான சுயாதீன ஊடக வலையப்பின் வசந்தம் எப். எம். வானொலியின் முழநேர அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

தற்போது கிண்ணியா நகரசபையில் கடமையாற்றும் இவர் பெரிய கிண்ணியா கிராம அபிவிருத்தி சங்கத்தின் உப தலைவரும், கிண்ணியா இமாம் கொமைய்னி விளையாட்டுக் கழகத்தின்  தலைவரும் கிண்ணியா பொது நூலகத்தின் நூலக ஆலோசனைக்குழுவின் உறுப்பினருமாவார்.

இவர் சமூக சேவை, கல்வி, கலாசாரம் தொடக்கம் பல்வேறு பொது விடயங்களில் பொது நலத்தோடு செயற்படும் ஒருவருமாவார்.

jp

Published by

Leave a comment