ஓட்டமாவடி: மர்ஹும் முன்னால் பிரதி அமைச்சர் மொஹைதீன் அப்துல் காதர் 1994ம் அண்டு ஓட்டமாவடி பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு சபையின் தவிசாளரக பதவி வகித்தற்குப் பிற்பாடு தொடர்ந் தேர்ச்சியாக பொதுசன ஐக்கிய முன்னணியின் நீல நிற ஆட்சியில் இருந்து வந்த ஓட்டமாவடி பிரதேச சபையானது,
இம்முறை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்கள் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியடைந்தற்குப் பிற்பாடு அமைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியுடனான புதிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக கருதப்படும் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் ஏறத்தாள பதினைந்து வருடங்களுக்குப் பிற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சராக வருகை தந்தமையும், அதிலும் முக்கியமாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கு வருகை தந்தமையானது நீல நிறமாக இருந்து வருகின்ற ஓட்டமாவடி பிரதேச சபையானது பச்சை நிறமாக சில மணிநேரம் காட்சியளித்ததை அவதாணிக்கக் கூடியதாக இருந்தது.
மிக நீண்ட காகத்துக்குப் பிற்பாடு ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஓட்டமாவடி பிரதேசத்துக்கு வருகை தந்ததனை முன்னிட்டு அமோக வரவேற்பளித்த ஓட்டமாவடி ஆளும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஓட்டமாவடி பிரதேச சபையினர் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதிகளில் பல ஆண்டுகளாக காணக்கிடைக்காத பச்சைக் கொடிகளை தொங்கவிட்டும், பிரதேச சபை வளாகத்திலும் அதனை அண்டிய பகுதியிலும் பச்சை நிறத்திலான ரவி கருனாநாயக்க அவர்களின் பனார்களை தொங்கவிட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களபு வரையிலும் பல இடங்களில் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களை மக்கள் வரவேற்றமையினை பார்க்கும் போது ஐக்கிய தேசியக்கக் கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மறுமளர்ச்சியை நோக்கிய புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது என்பதனை காணக்கூடியதாக இருக்கின்றமையானது மாவட்டத்தில் பச்சை நிறம் அதிகரிக்க வாய்புள்ளமையினை எடுத்துக்காட்டுகின்றது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சியின் உறுப்பினர் எல்.ரி. புர்கான் தலைமையில் இடம்பெற்ற இவ்வரவேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் கே.மோகன், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், சபையின் உறுப்பினர்களான ஐ.ரி.அஸ்மி, ஜுனைட் நளீமி, எஸ்.ஐ. முஹாஜிரீன், எம். அஹமட் ஆகியோர்களுடன் பொது மக்களும் கலந்து கொண்டதுடன் சபையின் உறுப்பினர் எஸ்.ஐ.முஹாஜிரீனினால் அமைச்சர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
இவ்வைபவத்துக்கு பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ் அமீர் அலி கலந்து கொள்ளா விடினும், சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் பிரதி அமைச்சருடன் தொடர்பினை ஏற்படுத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்கவுடன் உரையாடச் செய்தமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
மேலும் இந் நிகழ்வில் உரையாற்றிய நீதி அமைச்சரின் உரையினதும், வரவேற்பு நிகழ்வினதும் , மக்களுடனான அமைச்சரின் கலந்துரையாடல்களின் காணொளியானது எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது..


Leave a comment