மொய்ன்கான் மீது முட்டை வீச முயற்சி: கராச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

Pakistan WCup Cricket Khanகராச்சி: உலக கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா, மேற்கிந்திய அணிகளிடம் தோற்றது. இதனால் அந்த அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் தங்கி இருந்த தேர்வு குழு தலைவரான முன்னாள் வீரர் மொய்ன்கான் சூதாட்ட விடுதிக்கு சென்றதால் சர்ச்சையில் சிக்கினார். அவர் நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தர விட்டது.

இதையடுத்து பாகிஸ்தான் திரும்பிய மொய்ன்கான், கராச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள், ‘கிரிக்கெட்டுக்கு மொய்ன்கான் எதிரி, அவரை வெளியேற்று என்று கோசமிட்டனர்.

Pakistan WCup Cricket Khan
ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தாங்கள் கொண்டு வந்த முட்டைகளை தங்களது தலையிலேயே உடைத்து எதிர்ப்பை வெளிகாட்டினர்.

மொய்ன்கான் பத்திரிக்கை நிருபர்கள், ரசிகர்களை சந்திக்காமல் வேறு வழியாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தாங்கள் கொண்டு வந்த முட்டைகளை தங்களது தலையிலேயே உடைத்து எதிர்ப்பை வெளிகாட்டினர்.

இதுகுறித்து மொய்ன்கான் தொலைபேசியில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தபோது, ‘ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். நான் சாப்பிடுவதற்காகதான் அங்கு சென்றேன். ஆனால் நான் தேர்ந்தெடுத்த இடம் தவறானது’ என்றார்.

Published by

Leave a comment