கொழும்பு: வழக்குரைஞர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட LLM- சட்ட முதுமானி பட்டப்படிப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. இலங்கையில் முதன்முறையாக BCAS Campus யினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இந்த விசேட LLM பாட நெறி அங்குரார்ப்பண நிகழ்வு அதன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையில் கடந்த 26.02.2015 அன்று கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் பிரித்தானியாவின் Wolverhampton பல்கலைக்கழகத்தைச் சேந்ர்ந்த Dr.Loraine அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்தோடு BCAS Campus நிறுவனத்தின் சட்டக் கற்கைகள் பிரிவின் பீடாதிபதி Dr. Barry அவர்களும், சட்டக் கற்கைகளுக்கான இணைப்பாளர் குமுது ஹப்புஆராய்ச்சி அவர்களும், BCAS Campus இன் சட்டத்துறை விரிவுரையாளர்கள் பலர் உட்பட BCAS Campusஇன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் இஸ்திகார் அவர்களும் இதில் கலந்து கொண்டார்.
சட்டத்தரணிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் Dr. Loraine அவர்களும் விசேட உரை நிகழ்த்தினார்கள்.
தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் மத்தியில் LMD சஞ்சிகையினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட தரப்படுத்தலில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள BCAS Campus நிறுவனம், கடந்த 16 வருடங்களாக பல்வேறு துறைகளிலுமான உயர் கல்வி வாயப்புக்களை வழங்கி வருகிறது.
சர்வதேச தரமிக்க பல்கலைக் கழகங்களுடன் இணைப்பைக் கொண்டுள்ள BCAS Campus நிறுவனம் பொறியியல், முகாமைத்துவம், கட்ட நிர்மாணம், கணணி, சட்டம் மற்றும் உயிரியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் அடிப்படை (Foundation) பாட நெறிகள் முதல் பட்டப்பின்படிப்பு (Post Graduate) வரையான பல்வேறு உயர் கல்வி வாய்ப்புக்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment