கொழும்பு: வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆறு பேருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Published by

Leave a comment