பொதுத் தேர்தலில் போட்டியிட மகிந்தவுக்கு வாய்ப்பில்லை

mahindaகொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள சிரேஷ்ட தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக அந்த கட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட எந்த வகையிலும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது தேர்தலில் போட்டியிடவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எண்ணியுள்ளது. விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்ற கடும் ராஜபக்ச ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதையும் அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். வீரவன்ஸ மற்றும் கம்மன்பில போன்றவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது சந்தேகத்திற்குரியது எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டால், கிடைக்கக் கூடிய வாக்குகளும் கிடைக்காமல் போகலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கணித்துள்ளனர்.

Published by

Leave a comment