கொழும்பு: 2014 டிசம்பரில் நடைபெற்ற சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்பு உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோரவேண்டாம் எனவும் இதனால் பல மாணவர்களுக்கு அசாதாரணம் ஏற்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க நேற்று (26) விடுத்துள்ள அறிக்கையில்:
2015 உ/த பரீட்சைக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கும் இறுதி திகதி 2015.03.06 என அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 சா/த எழுதிய மாணவர்களுக்கு இன்னும் பெறுபேறு வெளியாகவில்லை.
இதனால் 2014 சா/த பரீட்சையில் கணிதம் அல்லாது சித்தியடைந்து 2015ல் கணிதம் சித்தியடைந்து தருவதாக உறுதியளித்து உயர்தரம் செல்ல எதிர்பார்க்கும் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்ளவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணிதம் சித்தியடைவதாக உறுதியளித்து நாடு முழுவதும் சுமார் 50,000 பேர் உயர்தரம் செல்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன எடுத்த சிக்கலான நடவடிக் கைகளை அப்படியே வைத்துக்கொண்டு தற்போதைய கல்வி அமைச்சரும் செயற்பட்டு வருவதாக மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Published by
![students_154_200[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/students_154_2001.jpg?w=116&h=150)
Leave a comment