காத்தான்குடி நகரசபைக்கு PMGGயின் உறுப்பினர் இன்று ஜும்ஆவின் பின்னர் சத்தியப் பிரமாணம்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: காத்தான்குடி நகரசபைக்கு புதிய உறுப்பினராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்MAHM.மிஹ்ழார், இன்று ஜும்மாவின் பின்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயிலில் இன்று இந்த சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது.
காத்தான்குடி நகரசபையின் உறுப்பினராக கடமையாற்றி வந்த அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி அவர்கள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீளளைத்தல் கொள்கைக்கமைய இராஜினாமா செய்ததினைத் தொடர்ந்து ஏற்றப்பட்ட வெற்றிடத்திற்கு MAHM.மிஹ்ழார் அவர்களை நியமிக்க சூராசபை அங்கீகாரம் வழங்கியது.
MAHM.மிஹ்ழார்
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் சுயேற்சைக் குழு 1ல் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு மக்களின் அங்கீகாரம் மூலம் இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Leave a comment