MSW கல்வி ஊக்குவிப்பு நிகழ்ச்சி

unnamed1MSW

காத்தான்குடி: காத்தான்குடி சமூக நலனுக்கான அமைப்பின் (MSW) கல்விப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  excellence award  நிகழ்வு 14/02/2015 ம் திகதி தாருல்-கைர் நிறுவனத்தில் நடைபெற்றது.

MSW அமைப்பின் உபதலைவர் Dr. ALA. ஷியாம் (MBBS) அவர்களின் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2014/2015 ம் கல்வி ஆண்டில் கா.பொ.த உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று காத்தான்குடியிலிருந்து மருத்துவ பீடத்துக்கு  தெரிவுசெய்யப்பட்ட  8  மாணவர்கள்  கொளரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக  கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் திரு. பரீட் ஆசிரியர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான  பரிசில்களையும் வழங்கிவைத்தார். இதில் கருத்துத்தெரிவித்த பரீட் ஆசிரியர்  அவர்கள், கல்வியின் முக்கியத்துவத்தையும்,  வைத்தியர்கள் பட்டப்பின்படிப்பைத் தெடர்வதின் முக்கியத்துவத்தை  எடுத்துக்கூறினார்.

இந்நிகழ்வில் கருத்துத்தெரிவித்த  Dr .ஷியாம் அவர்கள், சமூகத்தின் வளர்ச்சியில்  வைத்தியர்களின் பங்கு என்ற  தலைப்பில் உரையாற்றினார்.

MSW ன் இந்இந்நிகழ்ச்சியை மாணவர்கள் பாராட்டி கருத்துக்கள் தெரிவித்தனர். இறுதியாக  பல்கலைக்கழக  வாழ்வை முகம் கொடுத்தல் என்ற தலைப்பில்  கலந்துரையாடல்  ஒன்றும்  நடைபெற்றது.  

unnamed

unnamed1

Published by

Leave a comment