மொசூல் நகரின் அருங்காட்சியகத்தை அழித்தது ஐஎஸ் அமைப்பு

isisமொசூல்: வடக்கு ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் புராதன பொருட்களை ஆயுததாரிகள் அழிப்பதைக் காட்டுகின்ற வீடியோ காட்சியை இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், பெரிய சிலைகளையும் இடித்து வீழ்த்துகின்ற ஐஎஸ் ஆயுததாரிகள், சுத்தியலால் அவற்றை அடித்து உடைக்கின்றனர்.

isis

கிறிஸ்துவுக்கு முன் 9-ம் நூற்றாண்டுக் காலத்தின் அஸ்ஸிரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருட்களில் அடங்குகின்றது.

பொய்ச் சிலைகள் என்று அவற்றை விபரிக்கும் படங்களுடன், மொஹமது நபி அவற்றை அழிக்க உத்தரவிட்டிருந்தார் என்ற வாசகங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Published by

Leave a comment