பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முப்பெரு விழா..!

Bandaragama Gazzaly Vid, Programme (4)– எம். பளீல்

பண்டாரகம: பண்டாரகம அல்-கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இன்று (26.02.2015) காலை நடைபெற்ற முப்பெரு விழாக்களில் BCAS Campus தலைவர், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் MJM.மன்சூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் விசேட அதிதிகளாக உளவளத் துறை தொடர்பான ஆசிரிய ஆலோசகர் ஆனந்த நந்தசிறி, பண்டாரகம கோட்டக் கல்வி வலய அதிகாரி திரு மங்கள ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

Bandaragama Gazzaly Vid, Programme (4)

பாடசாலையின் உப அதிபர் சட்டத்தரணி ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இம்முப்பெரும் விழா மூன்று முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்தது.

Bandaragama Gazzaly Vid, Programme (2)

இப்பாடசாலையின் 2013 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட கொடிக்கம்ப மேடை திறந்து வைப்பு, பாடசாலையின் வரலாற்றைப் பதிவு செய்யும் சஞ்சிகை வெளியீடு, மற்றும் புதிய மாணவத் தலைவர்களுக்கான பதக்கம் அணிவிப்பு நிகழ்வு ஆகிய மூன்று விடயங்களை மையப்படுத்தியதாகவே இம்முப்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Bandaragama Gazzaly Vid, Programme (5)

பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்ட இவ்விழாவில் மாணவர்களின் தலைமைத்துவ பொறுப்புக்கள் தொடர்பாகவும் சமூக நோக்கில் பாடசாலைகளின் கடமைகள் தொடர்பாகவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இங்கு உரையாற்றினார்.

Bandaragama Gazzaly Vid, Programme (7)

Published by

Leave a comment