சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழக வீரர்கள் மெய்வல்லுனர் தொழில்நுட்ப அலுவலர்களாக தெரிவு

wish-logoஏ.ஜே. ஹஸ்ஸான் அஹமத்

அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரர்களும் வவுனியா கல்விக் கல்லூரியில் இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களான B.M. சிம்ஸார், A.M. றிப்கி அஹகட் ஆகிய இருவரும் மெய்வல்லுனர் தொழில்நுட்ப அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின்  பழைய மாணவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி நடை பெற்ற மெய்வல்லுனர் தொழில்நுட்ப அலுவலர் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்று தனது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். B.M. சிம்ஸார் 85 புள்ளிகளை பெற்று தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இவர்கள் இருவரும் எதிர் வரும் காலங்களில் தேசிய, சர்வதேச மட்ட போட்டிகளில் நடுவர்களாக கடமையாற்றுவற்கு கழக நிர்வாகம், அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment