100 நாள் வேலைத்திட்டம் பற்றி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம்

unnamedஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: அரசின் 100 நாள் வேலைத்திட்டம் பற்றி உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் மற்றும் இதன் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை அடையாளங் காணல் சம்பந்தமான உயர்மட்ட கூட்டம் இன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீத், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். உதுமாலெவ்வை, கணக்காளர் எம்.எம்.உசைனா, திவிநெகும முகாமையாளர்களான எஸ். றிபாயா, எம்.எஸ்.எம். மனாஸ் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி நிவாரணத் தொகையினை இரட்டிப்பாக்குதல், சமுர்த்தி நிவாரணம் பெறுவோரை மறுபரிசீலனை செய்வதற்கான குழுவினை அமைத்தல், திவிநெகும கடன் முறையினை அதிகரித்தல், கிராமங்களில் எழுச்சி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல், வீடமைத்தல் மற்றும் நீண்ட கால, குறிய கால வேலைத்திட்டங்களை செயற்படுத்தல் என்பன பற்றிய பிரதேச செயலாளர் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்ததுடன் இதற்கான அறிக்கைகளினை உடன் காரியாலத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரையும் விடுத்தார்.

unnamed

unnamed1

Published by

Leave a comment