காத்தான்குடி அரசியல்: ஹிஸ்புல்லாஹ்வுக்கான ஆதரவு அதிகரிப்பு

vote1காத்தான்குடி: ‘காத்தான்குடி மக்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்ன?’ எனும் ‘ஒன்லைன்’ வாக்கெடுப்பு கடந்த ஒரு மாதமாக எமது இணையத்தளத்தில் இடம்பெற்று, எமது வாசகர்களின் கணிப்பு அறியப்படுகின்து.

கடந்த ஒரு மாதமாக பொதுவேட்பாளர் ஒருவருக்கான ஆதரவே முன்னிலையில் இருந்தபோதிலும், ஆரம்பத்தில் 75 வீதமாக இருந்த பொது வேட்பாளர் ஒருவரின் தெரிவுக்கான வாக்களிப்பு தற்பொழுது 65 சதவீதத்திற்கு குறைந்திருக்கின்றது. மாறாக ஆரம்பபத்தில் ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிப்பதற்கான வாக்களிப்பு 25 வீதத்தில் இருந்து தற்பொழுது 35 வீதத்துக்கு முன்னேறி இருக்கின்றது.

vote

ஹிஸ்புல்லாஹ்வுக்கான எதிர்ப்பலைகள் ஊரில் தொடர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், ஹிஸ்புல்லாஹ் சாராத அரசியல் பிரமுகர்களின் உற்சாகமும் செயற்பாடுகளும், கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் சோர்ந்துவிட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் மீண்டும் தளம்பல் நிலைமை ஏற்பட்டு வருகின்றன.

vote1

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சி உறுப்பினர்களின் அரசியல் செயற்பாட்டில் ஏற்பட்டிருக்கும் தளம்பல் நிலைமைகளும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கவனம் இலங்கை முழுவதிலும் சென்றிருக்கும் நிலையில், ஹிஸ்புல்லாஹ்வுக்கான ஆதரவு, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சற்று அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது.

Published by

2 responses to “காத்தான்குடி அரசியல்: ஹிஸ்புல்லாஹ்வுக்கான ஆதரவு அதிகரிப்பு”

  1. INSHA ALLAH- Thesiya arasangaththil Amaichcharanal vakku vanki 90% aha athiharikkum.

  2. neenga than p. amaicharukku vote poddu iruppinga ellame mosadi thane makkal

Leave a reply to mohmedrislaam Cancel reply