லண்டன்: கத்தார் நாட்டில் கால்பந்தாட்ட உலகக் கோப்பை, நடைபெறுவதற்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களே உகந்த காலம் என்று கால்பந்தை நிர்வகிக்கும் அமைப்பான ஃபிஃபா குழு அறிவித்துள்ளது. பிரேசிலில் கடந்த கோடைக்காலத்தில் போட்டிகள் நடைபெற்ற நிகழ்வை விட சில நாட்கள் குறைவாகவே,
2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் எனவும் அது பரிந்துரைத்துள்ளது.
கத்தார் நாட்டின் கோடைக்கால வெப்பநிலை உதைபந்தாட்டத்திற்கு பொருத்தமானதல்ல என ஃபிஃபாவின் அந்தக் குழு ஏற்கனவே பிபிசிக்கு தெரிவித்தது. ஆனால் இந்த முடிவு தமது திட்டங்களில் கணிசமான இடையூறை ஏற்படுத்தும் என்பதால் ஐரோப்பிய லீக் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக இங்கிலாந்தின் பிரிமியர் லீக்கின் தலைமை நிறைவேற்று அதிகாரி ரிச்சாட் இஸ்குடாமோர் கூறினார்.
இறுதித் தீர்மானம் அடுத்த மாதம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
![qatar-2022-worldcup-logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/qatar-2022-worldcup-logo1.jpg?w=109&h=150)
Leave a comment