கொழும்பு: 100 நாள் வேலைத்திட்டதில் நடைமுறைப்படுத்தப்படாத செயற்திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும். அதற்கான அறிக்கை ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். மேலும் அரசியலமைப்புத் தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் இவ்வாரம் எமக்கு கிடைக்கப் பெறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கல்விக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு வழங்கி நாணய நிதியத்தின் ஆதரவினை பெற்றோம். எங்கள் மீது சந்தேகம் இருப்பின் அடுத்த தேர்தலில் மக்களே ஆட்சியை தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும் மக்கள் வரம் எமக்கு கிடைக்கப் பெறும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பிரஜைகள் சிவில் அமைப்புடனான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
Published by
![RanilWickramasinghe[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/ranilwickramasinghe1.jpg?w=109&h=150)
Leave a reply to Christine Cancel reply