மெல்போன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 137 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய வீரர் ஷிகர் தவானின் காதல் கதை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார்’ என்பது பொதுவாக கூறப்படுவது. மற்ற துறையில் இருப்பவர்களை விட இது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகமாகவே பொருந்தும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
எனவே, தான் கிரிக்கெட் வீரர்களை மட்டுமின்றி அவர்களது மனைவி மற்றும் காதலி குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். அதற்குத் தகுந்தாற்போல், வீரர்களும் தங்களது காதல் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை.
சச்சின் தனது இறுதி போட்டியில் மனைவி அஞ்சலியுடனான தன் காதலை பற்றி நெகிழ்வுடன் கூறியதை நாம் நிச்சயம் மறந்திருக்க முடியாது. இது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதேபோல், உலக கோப்பையில் அதிரடி தொடக்கத்தை கொடுத்திருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராத் கோஹ்லி, உலக கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்தார். அப்போது கோஹ்லியைப் போலவே அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவிற்கும் பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 137ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஷிகர் தவான். இதையடுத்து, ரசிகர்களின் கவனம் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி பக்கம் திரும்பியுள்ளது. ஷிகர் தவான் போலவே, ஆயிஷாவுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
Published by


Leave a comment