உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் இரட்டை சதம்: க்ரிஸ் கெய்ல் சாதனை, கெயிலின் எளிமையான மகிழ்ச்சி (வீடியோ)

gayleகான்பெரா: கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக இரட்டை சதம் அடித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் க்ரிஸ் கெய்ல் சாதனை படைத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான க்ரிஸ் கெயில், சிம்பாவே அணிக்கு எதிராக கான்பெராவில் நடந்த ஆட்டத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

35 வயதாகும் கிரிஸ் கெயில் 138 பந்துகளில் 200 ஓட்டங்களை எட்டினார்.

gayle

இதற்கு முன்பாக 1996ல் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் அடித்த 188 ஓட்டங்களே உலகக் கோப்பையில் எட்டப்பட்ட அதிக பட்ச ரன்னாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் 147 பந்துகளில் 215 ஓட்டங்களை எடுத்த கெயில், 16 சிக்ஸர்களை விளாசினார்.

Published by

Leave a comment