“இன்னும் 3 வருடங்கள் விளையாடுவேன்”: டில்சான்

dilshanகொழும்பு: உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2015 உடன், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளனர். இந்நிலையில், இன்னொரு சிரேஷ்ட வீரரான, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்சானும் தனது ஓய்வை அறிவிப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தன்னால் தொடர்ந்து சர்வதேச ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் விளையாட முடியும் என 38 வயதான டில்சான் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் பற்றி மேலும் அவர் குறிப்பிடுகையில், தொடர்ந்தும் ஒருநாள் மற்றும் ‘டுவென்டி 20’ போட்டிகளில் விளையாடும் எண்ணம் எனக்கிருக்கிறது. உலகக் கிண்ணத் தொடர் முடிந்த பின்னர் இது குறித்து, இலங்கையணித்தலைவர் மற்றும் அணி நிர்வாகத்திடம் நான் கலந்துரையாடவுள்ளேன்.

dilshan

எனது தற்போதைய உடல் நிலை மற்றும் தகுதியை வைத்துக் கொண்டு, என்னால் இன்னமும் இரண்டு மூன்று வருடங்கள் விளையாட முடியும் என நான் நம்புகின்றேன். இளையவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன்.

அவ்வாறே, எனக்கு உடற்தகுதி காணப்படாத பட்சத்தில் ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவேன்.

இவ்விரு வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் எண்ணம் எனக்கில்லை. காரணம், இரண்டு சிரேஷ்ட வீரர்களான மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்கள். எனவே, எனது அனுபவம் இலங்கையணிக்கு பிரயோசனமாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.

எங்கள் அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடியில் பிரச்சனை இருக்கின்றது. என் அனுபவத்தைப் பயன்படுத்தி அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என நான் நினைக்கின்றேன். அல்லது விலகிவிடுவேன்’ என்றார்.

திலகரட்ன டில்’hன் இதுவரை 309 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9425 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவர் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் 10 ஆயிரம் ஓட்டங்களைத் தாண்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த சகலதுறை வீரரான டில்சான் பந்துவீச்சில் 97 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். 100 என்ற மைல்கல்லை எட்டுவதற்கு அவருக்கு இன்னமும் 3 விக்கெட்டுக்கள் தேவை. உலகக் கிண்ணத்தொடரில் அதனையும் பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment