வவுனியா: இந்த வன்னி மாவட்டத்தில அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியல் அந்தஸ்த்தில் இல்லாமல் இருந்திருந்தால் இன்று எமது நிலைமை தொடர்பில் எதுவும் கூறி இருக்க முடியாது. நான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினராக அந்த கட்சியின் மேம்பாட்டுக்காக 20 வருடங்களுக்கு மேலாக பாடுபட்டவன் என்ற வகையில் றிசாத் பதியுதீனின் பயணமே சரரியானது
என வவுனியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், பிரபல சமூக செவையாளருமன் எம்.ஆரிப் தெரிவித்தார் .
வவுனியா ஆண்டியாப்புளியங்குளத்தில் இடம் பெற்ற வபைவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் –
இந்த வன்னி மாவட்ட அரசியல் வரலாற்றில் வரலாறு படைத்த ஒரு அரசியல் வாதி இருப்பார் என்றால் அது அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை தமிழ் பேசும் மக்கள் மறந்து விட முடியாது.ஏன் தமிழ் பேசும் மக்கள் என்று சொல்கின்றேன் என்றால்,நாம் மொழியால் ஒன்றுபட்டவர்கள் இந்த மொழி தான் எங்களை எல்ல சந்தர்ப்பங்களிலும் ஒன்றுமைப்டுத்தியுள்ளது.ஆனால் இன்றும் சிலர் தமிழ்,முஸ்லிம் என்று பிரித்து பேசுகின்றனர்.
இந்த வடபுலத்தில் இருந்து இடம் பெயர்க்கப்ட்ட ஒருவர் அரசியலில் அதி உயர் பதவியை அடைந்திருக்கின்றார் என்றால் அது அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சுப்பதவி இந்த பதவியின் மூலம் வடக்கு மக்களுக்கு மட்டுமன்றி நாட்டு மக்களுக்கும் தேவையான பணிகளை செய்துவருகின்றார்.அவரை ஒரு அரசியல் ஞானி என்று சொன்னாலும் மிகையாகாது.
இப்படிப்பட்ட மக்கள் சேவகர்கள் எமமு சமூகத்தில் காணப்படுவது அரிதாகும்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற ஒரு விருட்சத்தை தோற்றுவித்து அதன் மூல் இன ஒற்றுமை,மக்களின் அபிலாஷைகள்,உரிமை போராட்டங்கள்,அபிவிருத்திகள் என பல்துறைகளில் மக்கள் பணியாற்றும் ஒரு தலைவனை நாம் இன்று பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.சிலர வெறும் பதவிகளுக்காக அரசியல் தலைமைகளாக இருக்கின்றனர்.தான் இத்தனை வருடம் கட்சியின் தலைவராக இருக்கின்றேன் என்று பெருமைப்படுகின்றனர்.ஆனால் அவர்கள் மக்களுக்கு எதையும் செய்ததில்லை.யாரே செய்தவற்றை தாம் செய்ததாக கூறும் நபர்களாக உள்ளனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிகள் என்னை கவர்ந்தன,சதாவும் மக்களை பற்றி சிந்திப்பது.எந்த வேளையிலும் மக்களை சந்திப்பது,அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பது இது போன்ற அந்த பணிகள் அவரை இன்று மக்கள் மனங்களில் குடி கொள்ளச் செய்துள்ளது.ஆனால் சிறுபான்மை சமூகத்தின் ஏக பிரதி நிதிகள் என்று கூறிக்கொண்டு இருக்கும் முஸ்லிம்,தமிழ் கட்சிகள் மக்களுக்கு செய்தது என்ன என்பதை நானும்,நீங்களும் அறிவீர்கள்.
வவுன்pயாவில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு தேவையான வீடமைப்புத்திட்டம்,பாதைகள்,கல்விக் கூடங்கள்,தொழில் வசதிகள்,நியமனங்கள்,உள்ளிட்ட இன்னும் எத்தனையோ பணிகளை நேர்மையாக ஆற்றிய தலைவராக இவரை இங்கு புடம் போட்டு காட்ட வேண்டும்.ஆனால் இந்த பணிகள் சிலர இனவாதமாக காட்டுகின்றனர்.இவர்களால் இது போன்ற பணிகளை செய்து காட்டுவார்களா.? ஏன்று சவால் விடுகின்றனர்.
இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட கதைகளை பரப்பிவருகின்றனர்.இதற்கு ஊடகங்கள் சிலவும் பின்னணியில் இருந்து செயற்பபடுகின்றது.மன்னாரில் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்ற சம்பவமொன்றுடன் அமைச்சரை தொடர்புபடுத்தி பியைழான செய்திகளை சொல்கின்றனர்.அந்த சம்பவம் இடம் பெற்ற போது அமைச்சர் றிசாத் கொழும்பில் இருந்தார்.அவருக்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது.கொழம்பில் இருந்து கொண்டா மன்னாருக்கு கற்களை வீசினார்.புத்திசாதுரியமற்ற,சித்த சுவாதீனர்களாக விடயங்களை பேசுகின்றனர்.
அதே போல் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட் ட மக்களை மீள்குடியேற்றம் செய்ய முற்பட்டார்.அவர்கள் வாழ்ந்த காணிகள் காடுகளாக,கால் நடைகளின் உறைவிடமாக இருந்தது.சில காணிகள் சில தரப்புக்களால் கபளீகரம் செய்யப்பட்டிருந்தது.இவற்றை மீட்டிக் தாருங்கள் என்று கேட்டால் அமைச்சர் இனவாதி என்று கூறுகின்றனர்.அவருக்கு எதிராக போலியான முறைப்பாட்டுக் கடிதங்களை அனுப்புகின்றனர்.
மன்னார் மஙறிச்சுக்கட்டியில் முஸ்லிம்கள் பரம்பரை பரையாக வாழந்த காணிகள் பறிபோய்வுள்ளன.அவற்றுக் கு மாற்றீடாக அரசாங்கத்துடன் பேசி உரிய சட்ட திட்டங்களுக்கு அமைய காணிகளை மக்கள் வாழ்வற்கு பெற்றுக் கொடுக்க முற்படுகின்ற போது பொதுபல சேனா போன்ற இன்னும் வாதிகள் அதங்கு எதிராக செயற்படுகின்றனர்.இங்கு கட்டப்படும் வீடுகள் தொடர்பில் விமர்சனங்களை செய்கின்றனர்.இவ்வாறு செய்கின்றவர்களுக்கு எம்மில் உள்ள சில காழ்புணர்ச்சி கொண்டவர்களும் துணை போய் நிற்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து வவுனியாவுக்கு வந்த எமது தமிழ் சகோதரர்கள் 3 இலட்சம் பேர்களை மெனிக்பாம் முகாம் அமைத்து என்ன உதவிகளை அவர்களுக்கு செய்ய முடியுமே அதனை செய்த இந்த தலைவர் றிசாத் பதீயுதீனுக்கு சங்கடங்கள் வருகின்ற போது அதற்கு உதவி செய்யாமல் அவரை விமர்சிப்பதும்,அவரை விழ்த்த நினைப்பதும் எறந்த வகையில் நியாயமாகும்.
இன்று இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தில் பேசப்படும் ஒரு தலைமையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் மட்டுடே இருக்கின்றார்.இவரது போராட்டப் பாதையில் நாங்களும் போராளிகளாக பயணிப்பதில் மன மகிழ்வு கொண்டுள்ளோம்.
இந்த வவுனியா மாவட்டத்தில் இன்று எமது மக்கள் அனுபவிக்கும் அனைத்து அபிவிருத்திகளும் அமைச்சர் றிசாத் பதியுதீனினால் தான் கொண்டுவரப்பட்டது என்பதை பகிரங்மாக தெரிவிப்பதாக வவுனியா நகர சபையின் முன்னாள் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.ஆரிப் கூறினார்.
Published by


Leave a comment