மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு

unnamed2இஸ்லாமிக் சென்றர் / பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணர்களுக்காக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த கல்விக் கருத்தரங்கு 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் மாலை 6.15 மணிவரை இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதற்காக பல்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவுகளும் உளவியல் சார் பயிற்ச்சிகளும் இந்நிகழ்வில் உள்ளுர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பல மார்க்க அறிஞர்கள் உளவியளாளர்கள், இஸ்லாமிக் சென்றர் நிருவாகிகள் மற்றும் மாணவ ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் அதிகமான மாணவர்களும் கலந்து காலை 8:30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு மாலை மஃரிப் தொழுகையுடன் நிறைவு பெற்றது.

கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்வுக்காக ஜம்இய்யதுஸ் ஸபாப் நிறுவனம் அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment