ஊடகப்பிரிவு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிகண்டி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) மக்கள் சந்திப்புகள் கடந்த 21, 22ம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் பல தொடர்ச்சியாக இடம் பெற்றன.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்டி எழுப்ப விரும்பும் அரசியல் கட்டமைப்பும் அரசியல் கலாச்சாரம் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பிரதேச மக்களுக்கு இச்சந்திப்புக்களின்போது விளக்கம் அளிக்கப்பட்டன.
21ம் திகதி சனிக்கிழமை மாலை அக்குரணையிலும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தெல்தோட்டையிலும் மாலை கம்பளை நகரிலும் இம்மக்கள் சந்திப்புக்கள் நடைபெற்றன.
இதேவேளை 21ம் திகதி சனிக்கிழமை காலை அக்குரனையில் பெண்களுக்கென பிரத்தியேகமான பெண்கள் சந்திப்பு ஒன்றும் இடம் பெற்றது.
இச்சந்திப்புக்களின்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத், முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறிப்பினருமான அய்யூப் அஸ்மின், NFGGயின் கண்டி மாவட்ட ஒறுங்கிணைப்பாளர் ஹலீம் றிஷாட் ஆகியோர் உரையாற்றியற்றினர்.
இதன்போது NFGGயின் செயற்குழு உறுப்பினர்கள், கல்விமான்கள், அரசியல் செயற்பாட்டளர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் NFGGயின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
Published by

Leave a comment