முசலி: மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகள், மத தளங்கள், மீனவ சங்கங்கள் என்பனவற்றுக்கான உதவிகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரமான றிசாத் பதியுதீன் இன்று காலை வழங்கி வைத்தார்.
முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான அலிகான் ஷரீப், எம்.முனவ்வர் உள்ளிட்ட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
இதன் போது கருத்துரைத்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,
முசலி பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் பல முயற்சிகளை செய்துவருகின்றோம். கல்வியின் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அன்று முதல் இன்று வரை நாம் உறுதியுடன் செயற்பட்டுவருகின்றேன்.
மீள்குடியேற்றம் முதல் ஏனைய செயற்பாடுகள் வரை யில் நாம் முன்னெடுக்கின்ற போது எத்தனை சவால்களும், தடைகளும் எமக்கெதிராக வருகின்றன. அவற்றையும் கடந்து எமது மாவட்ட மக்களுக்கு எம்மால் ஆன பணிகளை செய்கின்றோம். எதிர்காலத்திலும் அதனை நாம் செய்யவுள்ளோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
Published by

Leave a comment