சமயப் பன்மைத்துவத்தை மக்கள் மயப்படுத்தும் தாக்கமுள்ள கலையே வானொலி நாடகம்: பேராசிரியர் . டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர

unnamed1எம்.ரீ.எம். பாரிஸ்

கொழும்பு: சமயப் பன்மைத்துவத்தை மிகவும் தாக்கமாக மக்களிடம் கொண்டும் செல்லும் கலைகளில் மிகவும் துரிதமானதே வானொலி நாடகம் என இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தழிழ் மற்றும் சிங்கள் மொழிகளில் அமுல்படுத்தும் சமயப் பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் வானொலி நாடகச் செயற்றிட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ‘சமூக மாற்றம் என்பது மிகவும் மந்தமாக இடம்பெறும் செயற்பாடாகும். இதனை துரிதப்படுத்தும் போது, மக்களிடம் நடத்தை சார் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் கட்டாயமாகும். வானொலி நாடகத்தைப் பொறுத்தவரை, நடத்தைசார் மாற்றங்களை ஊக்குவிப்பதில் அதிகம் தாக்கம் செலுத்தக்கூடியதாகும். தமிழ் சிங்கள கலைஞர்களுடன் இணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தயாரித்து ஒலிபரப்பிய நாடகங்கள் இலங்கையில் சமய சகிப்புத்தன்மை, சமயப் பல்வகைமை, மற்றும் சமயத்தை பின்பற்றுவதற்கான உரிமை ஆகியன தொடர்பில் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கின்றன’ என்றார்.

இச்செயற்றிட்டத்தின் கீழ், 24 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். இலங்கையில் சமய சகிப்புத்தன்மை மற்றும் சமய சுதந்திரம் தொடர்பில் கள ஆய்வொன்றை மேற்கொண்ட இளம் நாடக எழத்தாளர்களுக்கு சுமார் 8 நாட்கள் வதிவிடப் பயிற்சி வழங்கப்பட்டன. இதில் நவீன வானொலி நாடகக் கலையினைப் பயன்படுத்தி, கள ஆய்வின் போது பெற்றுக்கொண்ட அவதானங்களை வெளிப்படுத்தும் விதம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. பாத்;திர உருவாக்கம், சம்பவங்களைத் தொகுத்தல், பிரச்சினைகளை இனங்காணல், அதற்கேற்ற வகையில், காட்சிகளை உருவாக்குதல், கதைச் சம்பவங்களை வரிசைப்படுத்துதல் மற்றும் பிரதியாக்கம் பற்றிய செய்கைசார் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

பயிற்சி முடிவில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களில் சமய சகிப்புத்தன்மை தொடர்பில் நிலவும் மனப்பாங்குகளை மையமாகக் கொண்ட 12 பிரதிகள் எழுதப்பட்டன. இந்தப் பிரதிகள் மீண்டும் குறித்த பிரதேசங்களில் உள்ள சிவில் சமூக அங்கத்தவர்களிடம் கொடுத்து அவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டன. சிலபோது, சிவில் சமூக அங்கத்தவர்கள் இளம் எழுத்தாளர்களின் பிரதிகளில் மாற்றங்களை வேண்டினர். அவ்வாறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பிரதிகள் மீண்டும் எழுத்தாளர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்ட பின்னர் ஒலிப்பதிவுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டன.

சிங்கள் நாடகங்கள் யாவும் ரஜரட்ட சேவையிலும் தமிழ் நாடகங்கள் யாவும் பிறை வானொலியிலும் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. வன்முறைகளை தூண்டுவதற்காக சமயத்தை கேடயமாகப் பயன்படுத்துதல், சமயத்தை பெருமதமாகக் கருதி, ஏனைய சமயங்களை அவமதித்தல், சமய உரிமையை மறுத்தல், சமயங்கள் போதிக்கும் பொது விழுமியங்கள் பற்றிய அறியாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த நாடகங்கள் பேசின. இந்நாடகங்கள் யாவும் மீண்டும் அநுராதபுரம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மக்கள் மத்தியில் செவிமடுக்க விடப்படும்.

unnamed

unnamed1

Published by

Leave a comment